சிவகுமார் என் மூன்றவாது மகன் கடிதம் எழுதி நெகிழ்ந்த ஒய்.ஜி.ராஜலட்சுமி பார்த்தசாரதி

வியாசரும் ராஜாஜியும் இணைந்த நவீன வியாசர் சிவகுமார்- ஒய்.ஜி.ராஜலட்சுமி பார்த்தசாரதி

சென்னை: 120 வயது வரை வாழ்ந்த ராமானுஜர் போல நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். மேலும் தமிழ் கலாச்சாரத்தை நிலை நாட்டும் உங்களின் இந்த உன்னத சேவை நிலைத்து நிற்க வேண்டும் என்று ஆசிர்வதிக்கிறேன் என ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி தனது மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சிவகுமாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை நடிகர் சிவக்குமார் தற்போது வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவகுமார் பிரபல தனியார் தொலைக்காட்சியில், கம்பராமாயணம் மற்றம் மகாபாராதம் ஆகிய புராண காவியங்களை அழகான எளிய தமிழ் நடையில் அவ்வப்போது உரை நிகழ்த்தி வருகிறார். அவருடைய இந்த எளிய உரைநடை அனைவருக்கும் பிடித்துப்போனது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் இவருடைய உரைகள் அப்படியே கட்டிப்போடுவதுண்டு.

Sivakumar releases a letter written by YG Rajalakshmi Parthasarathy

அதற்கு பிரபல குணச்சித்திர நடிகரும் நாடக நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதியும் விதிவிலக்கல்ல. இவர் இந்திய பத்திரிகையாளர், கல்வியாளர் மற்றும் சமூக சேவகர். மேலும் பி.எஸ்.பி.பி குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆவர். அவர் வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் தனக்கு எழுதிய கடிதத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சிவக்குமார். அதில் அவர் சிவக்குமாரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

அன்புள்ள சிவகுமார்,

நீங்கள் கம்பராமாயணத்தை கூறுவதையும், விவரிப்பதையும் பார்த்த பிறகு, கலியுக கம்பனாக என் கண்களுக்கு நீங்கள் தெரிகிறீர்கள். வியாசர் மற்றும் ராஜாஜி இணைந்த அடுத்த கலியுக வியாசர் நீங்கள் என்று நான் நம்புகிறேன். நீங்களும் மிகவும் சரளமாக மகாபாரதத்தினை தமிழில் விவரிக்கிறீர்கள்.

மனப்பூர்வமாக உங்களை நான் எனது மூன்றாவது மகனாக பார்க்கிறேன். உங்களை போன்ற ஒரு வியத்தகு தமிழ் அறிஞரை கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் மற்றும் உங்கள் மருமகள் ஜோதிகா ஆகியோர் உங்களை போலவே உங்களின் வழிகளை பின்பற்றி செல்வர் என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை.

அனைத்து மாநில பள்ளிகள், அனைத்து சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள ஐசிஎஸ்இ (ICSE) பள்ளிகள் மற்றும் நம் நாடு கடந்த தலைமுறையினருக்கும், நம்முடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பொக்கிஷங்களை பற்றி நீங்கள் நாடகங்களாக விவரிக்க நான் கட்டாயமாக பரிந்துரைக்கிறேன்.

120 வயது வரை வாழ்ந்த ராமானுஜர் போல நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். மேலும் தமிழ் கலாச்சாரத்தை நிலை நாட்டும் உங்களின் இந்த உன்னத சேவை நிலைத்து நிற்க வேண்டும் என்று ஆசிர்வதிக்கிறேன் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X