சூர்யா வீட்டிலிருந்து விஜய்க்கு விழுந்த வாக்குகள் எத்தனை தெரியுமா?.. இது லிஸ்ட்லையே இல்லையே ப்பா
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று முதலமைச்சராகியிருக்கும் விஜய்; தனது பணிகளில் மும்முரமாக இருக்கிறார். அவரது செயல்பாட்டிலும் குறைகளும், விமர்சனங்களும் சொல்லப்பட்டாலும் போகப்போக அனைத்தையும் சரி செய்துகொள்வார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் தவெகவினர். சூழல் இப்படி இருக்க நடிகர் சூர்யா வீட்டிலிருந்து விஜய்க்கு வாக்களித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
திமுக, அதிமுக என இரண்டு கட்சிகள்தான் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்தன. அந்த நீண்ட நெடிய பாரம்பரியத்தை நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த சில வருடங்களிலேயே உடைத்திருக்கிறார். அவரது கட்சி மொத்தம் 108 தொகுதிகளில் வென்றது. விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு சி. ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக சில வாரங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டார்.

எழும் விமர்சனங்கள்: முதலமைச்சரானதும் முந்தைய ஆட்சியில் இருந்த மக்கள் நல திட்டங்கள் அப்படியே தொடர்வதற்கான ஏற்பாடுகளை விஜய் செய்துவிட்டார். இருப்பினும் அவர் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்ற ஆரம்பிக்கவில்லை. அதற்கு கொஞ்சம் டைம் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்கள். அதேபோல் முதலமைச்சராக அவரது செயல்பாடுகள் சில விமர்சனங்களையும் சந்திக்கின்றன. முக்கியமாக பிரதமர் மோடி போல் செய்தியாளர்களை சந்திக்க மறுக்கிறாரே; இவர் தமிழ்நாட்டின் மோடியோ என்றும் கிண்டல்கள் எழுந்திருக்கின்றன.
சிவகுமார் பேச்சு: இருப்பினும் அனைத்தையும் போகப்போக சரி செய்துகொள்வார் என்பது தவெகவினரின் நம்பிக்கை. இந்நிலையில் நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "விஜய் வந்ததை நினைத்து சந்தோஷப்படலாம். அவர் வித்தியாசமாக செய்வார் என்று நம்பித்தானே வாக்களித்திருக்கிறீர்கள். மாற்றம் என்பது யாராலும் தடுக்க முடியாத விஷயம். 1954லிருந்து ஒன்பது வருடங்கள் காமராஜர் இந்த நாட்டினை ஆட்சி செய்தார். அவர் ஒன்பது வருடங்கள் சிறையில் இருந்தார்; ஒன்பது வருடங்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்.
அவரையே தோற்கடித்தோம்: அவர் சாகும்போது தலைமாட்டில் 140 ரூபாய், நாலு ஜோடி சட்டை, இரண்டு ஜோடி செருப்பு, சில புத்தகங்கள் மட்டும்தான் இருந்தன. அப்படிப்பட்ட காமராஜரையே தோற்கடித்தார்கள். அந்த காமராஜரே தேவையில்லை மாற்றம் வேண்டும் என்றுதான் தோற்கடித்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் விஷ கிருமிகள் பரவுவதாக பக்தவச்சலம் கூறினார். அவர்களை ஏன் விஷ கிருமிகள் என சொல்ல வேண்டும். திமுகவும், அதிமுகவும்தானே 69 வருடங்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கின்றன.
பேரன் வாக்களித்தான்: இப்போது அவர்கள் வேண்டாம் என்றுதானே விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். யார் வேண்டும் வேண்டாம் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள்தான் நீதிபதிகள். கிட்டத்தட்ட 90 விழுக்காடு இளைய தலைமுறையினர் பணமே வாங்காமல் வாக்களித்திருக்கிறார்கள். பெண்கள் நிறைய வாக்களித்திருக்கிறார்கள். எனது பேரன் விஜய்க்கு வாக்களித்திருக்கிறான். அவன்தானே அடுத்த தலைமுறை. அதை தவறு என்று எப்படி சொல்ல முடியும். விஜய் நல்லது செய்வார் என்று நம்புவோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
