twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா பரவல் காலம்...டிரெண்டிங் ஆன சிவக்குமாரின் வீடியோ

    |

    சென்னை : தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என புகழப்படுபவர் நடிகர் சிவக்குமார். 1965 ம் ஆண்டு காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை துவக்கினார் சிவக்குமார். தொடர்ந்து 195 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

    Sivakumars breathing exercise video goes in social media

    2001 ல் பூவெல்லாம் உன் வாசம் படத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திய சிவக்குமார், 2010ல் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தில் இந்திய ஜனாதிபதி கேரக்டருக்காக டப்பிங் பேசி இருந்தார். 1990 களில் இருந்து 2008 வரை கையளவு மனசு, ரேவதி, காவேரி, சித்தி, அண்ணாமலை, லட்சுமி உள்ளிட்ட பல டிவி சீரியல்களில் நடித்தார்.

    அடுத்தப்படம் ரஜினிகாந்துடனா? தீயாய் பரவும் தகவல்.. இயக்குநர் தேசிங்கு பெரியசாமி விளக்கம்! அடுத்தப்படம் ரஜினிகாந்துடனா? தீயாய் பரவும் தகவல்.. இயக்குநர் தேசிங்கு பெரியசாமி விளக்கம்!

    பிஸியாக படங்களில் நடித்த காலங்களிலும், அதற்கு முன்பும், பிறகும் யோகா, தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர் சிவக்குமார். தற்போது வரை இதை தவறாமல் கடைபிடித்து வருகிறார். சிறந்த ஓவியர், பேச்சாளர், தமிழ் இலங்கியங்கள் மீது ஆர்வம் கொண்டவர் என பல முகங்களைக் கொண்டவர்.

    கொரோனா தீவிரமாக பரவி வரும் இன்றைய கால கட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மூச்சுத்திணறல் போன்றவற்றால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த சமயத்தில் பிராணயாமம் எனும் மூச்சு பயிற்சியை எளிதாக எவ்வாறு செய்வது என்பது பற்றி சிவக்குமார் கூறும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

    2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் யூட்யூப்பில் வெளியிடப்பட்ட 58 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ, தற்போது டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. பழைய ஃபோட்டோக்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்படுவது புதிதல்ல. சமீப காலமாக இது வழக்கமான விஷயமாகி உள்ளது என்றாலும், கொரோனா உச்சம் தொடும் சமயத்தில் டிரெண்டிங் ஆகும் இந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.

    English summary
    Sivakumar's breathing exercise video goes in social media
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X