லேடி கெட்டப்பில் கமல்ஹாசனை மிஞ்சிய பிரபல நடிகர்…வைரல் பிக்ஸ்!
சென்னை : நடிகர்கள் அவ்வப்போது துணிச்சலான பல வேடங்களை ஏற்று நடித்து வரும் நிலையில் அதில் மிக முக்கியமான ஒன்று பெண் வேடம். பெண் வேடமிட்டு நடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்றாலும் அதை குறைந்தது ஒரு திரைப்படத்திலாவது பெரும்பான்மையான நடிகர்கள் முயற்சித்து இருப்பார்கள்.
அந்த வகையில் பிரபல மூத்த நடிகர் ஒருவர் வித்தியாசமே தெரியாத அளவிற்கு லேடி கெட்டப்பில் அசத்தலாக இருக்க அருகில் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படம் ஒன்று இப்பொழுது இணையதளத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

லேடி கெட்டப்
தமிழில் சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என அன்று முதல் இன்று வரை பலரும் திரைப்படங்களில் லேடி கெட்டப்பில் வந்து அசத்தி இருக்கும் நிலையில், சிலருக்கு பெண் வேடம் பொருந்துவதில்லை.

மனதை வென்றவர்கள்
எனினும் கதாநாயகர்கள் பலர் திரைப்படங்களில் துணிச்சலாக பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் அதில் பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர்கள் இங்கு வெகு சிலரே.

ஹீரோயின்களுக்கே டஃப்
அந்த வகையில் கமல்ஹாசனின் அவ்வை சண்முகி, விக்ரமின் கந்தசாமி, பிரசாந்த்தின் ஆணழகன், சிவகார்த்திகேயனின் ரெமோ மற்றும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் என பல நடிகர்கள் பெண் கதாபாத்திரத்தில் நடித்து ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்திருப்பார்கள்.

வேகமாக பரவி வருகிறது
அந்த வகையில் பிரபல மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவக்குமார் லேடி கெட்டப்பில் நடித்து அசத்தி இருந்த திரைப்படத்தின் புகைப்படம் ஒன்று இப்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வெட்கத்துடன்
கமல்ஹாசன் ஐயர் கெட்டப்பில் குடுமியுடன் இருக்க, சிவகுமார் மடிசார் மாமி கெட்டப்பில் சேலையில் அம்சமாக வெட்கப்பட்டுக்கொண்டு நிற்கும் பலரும் கண்டிராத இந்த அரிய புகைப்படம் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











