ஹோட்டல் சாப்பாடும், நடிகைகளும் ஒன்றா?.. அப்போ ஜோதிகா யாரு?.. சிவகுமாருக்கு ப்ளூ சட்டை மாறன் கேள்வி!

சென்னை: சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் இப்போது ஹிந்தி திரையுலகத்தில் கவனம் செலுத்துவதால் மும்பையிலேயே செட்டிலும் ஆகிவிட்டார்கள். அவ்வப்போது அவர்கள் சென்னை வந்து செல்வதாக தெரிகிறது. சூர்யா மும்பை பறந்தாலும் கார்த்தி தனது குடும்பத்தினருடன் சென்னையில்தான் இருக்கிறார். இந்நிலையில் நடிகரும், நடிகர் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் பேசியிருக்கும் விஷயம் கண்டனத்தை சம்பாதித்திருகிறது.

பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோது சூர்யாவும், ஜோதிகாவும் காதலிக்க தொடங்கினார்கள். தொடர்ந்து பேரழகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்கள். அவர்களது காதலுக்கு சிவகுமார் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வது என்பதில் கறாராக இருந்த சூர்யாவும், ஜோதிகாவும்; தங்களுக்கு திருமணம் செய்து வைக்காவிட்டால்; கடைசி வரை தனியாகவே வாழ்ந்துவிடுவோம் என கண்டிஷன் வைக்க; சிவகுமாரும் ஒத்துக்கொண்டார். திருமணம் கடந்த 2006ஆம் ஆண்டு நடந்தது. ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.

Sivakumar s Remark Sparks Backlash Blue Sattai Maran Reacts Amid Jyothika Debate
Photo Credit:

மும்பையில் செட்டில்: திருமணத்துக்கு பின்பு மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் ஜோதிகா; இந்த முறை ஹிந்தியில் கவனத்தை செலுத்திவருகிறார். தனது கணவரையும் பாலிவுட்டில் நடிக்க வைக்க பிளான் செய்து; அதற்கேற்ற வேலைகளை செய்தார். மேலும் மும்பையிலும் சென்று செட்டிலாகிவிட்டார்கள். உண்மையான காரணம் இப்படி இருக்க; சிலரோ சிவகுமாரோடு சண்டை; அதனால்தான் கணவர், குழந்தையை கூட்டிக்கொண்டு மும்பைக்கு போய்விட்டார் என கிளப்பிவிட்டார்கள். அதை திட்டவட்டமாக இரண்டு பேருமே மறுத்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகுமாரின் கருத்து: மேலும் தான் திருமணத்துக்கு பின்பு நடிப்பதற்கு சிவகுமார்தான் முழு ஆதரவையும் கொடுத்திருக்கிறார் என்றும் ஜோ விளக்கியிருந்தார். இந்நிலையில் சிவகுமாரின் கருத்து ஒன்று விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ஹோட்டல் சாப்பாடு நடிகை மாதிரி. வீட்டு சாப்பாடு மனைவி மாதிரி. வீட்டு சாப்பாடு என்பது நிரந்தரம். ஒரு மாற்றத்துக்காக வேண்டுமானால் ஹோட்டலில் சாப்பிடலாமே தவிர்த்து மூன்று வேளையும் சாப்பிட்டால் பைத்தியம் பிடித்துவிடும். எப்போதுமே வீடு, மனைவி, குழந்தைதான் முதலில். ஹோட்டல் எல்லாம் அப்புறம்தான்" என்றார்.

Also Read
நிச்சயதார்த்தம் முன்பு விஜய் கொடுத்த கிஃப்ட்.. சர்ப்ரைஸ்.. சங்கீதாவுக்கு எவ்வளவு ஹேப்பி பாருங்க
நிச்சயதார்த்தம் முன்பு விஜய் கொடுத்த கிஃப்ட்.. சர்ப்ரைஸ்.. சங்கீதாவுக்கு எவ்வளவு ஹேப்பி பாருங்க

ப்ளூ சட்டை மாறன் கண்டனம்: அவரது இந்தக் கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஹோட்டல் சாப்பாடும் நடிகைகளும் ஒன்றா? அவர்களுக்கு குடும்பம் இல்லையா? பெண்கள் பற்றிய உங்களது பார்வை இவ்வளவு கீழ்த்தரமானதா? நடிகையை மணம் செய்த உங்கள் புதல்வர் இந்தக் கருத்தை ஏற்பாரா? ஏன் இப்படி அடிக்கடி உளறுகிறீர்கள்? திருந்தவே மாட்டீர்களா?" என்று விளாசியிருக்கிறார். அவரது இந்த ட்வீட் ட்ரெண்டாகியுள்ளது.

விஜய் மீது அட்டாக்?: முன்னதாக சிவகுமாரின் இந்தக் கருத்தை சிலர் இன்னொரு கோணத்திலும் எடுத்திருக்கிறார்கள். அதாவது, சங்கீதாவை விட்டுவிட்டு திரிஷா பின்னால் விஜய் சுற்றுவதைத்தான் சிவகுமார் ஹோட்டல் சாப்பாட்டோடு ஒப்பிட்டு இப்படி பேசியிருக்கிறார். விஜய்யை இப்படி அட்டாக் செய்துவிட்டாரே என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அதேசமயம் தனது மருமகளே நடிகையாக இருக்கும்போது இப்படி கீழ்த்தரமாக பேசியிருக்க வேண்டாம் என்பதும் பலரது கருத்தாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X