அப்போ செல்போன்.. இப்போ சால்வையா?.. சால்வை குமாராக மாறிய சிவகுமார்.. என்னவொரு கோபம்!

சென்னை: காரைக்குடியில் புத்தக திருவிழா ஒன்றில் பங்கேற்ற சிவகுமாருக்கு வயதான ரசிகர் ஒருவர் சால்வை அணிய முயற்சிக்க அதை பார்த்து கோபமடைந்த சிவகுமார் அந்த சால்வையை எடுத்து தூக்கி வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பல புத்தகங்களை படித்து பல நல்ல கருத்துக்களை கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சொற்பொழிவு ஆற்றி வரும் சிவகுமாருக்கு கோபத்தை அடக்கும் பாடத்தை யார் கற்றுத்தருவார் என ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Sivakumar shows his anger on a fan video shocks netizens

ஏற்கனவே செல்ஃபிகுமார் என பட்டப் பெயர் வைத்து கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில், இன்று முதல் சால்வை குமார் என அழைக்கப்படுவீர்கள் என நெட்டிசன்கள் அந்த வீடியோவை பார்த்த பின்னர் சூர்யாவின் தந்தையை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

82 வயசாகிடுச்சு: டீ, காபி குடிக்காமல், தினமும் யோகா செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். மனைவியை தவிர வேறு எந்த பொம்பளையையும் ஏறெடுத்துப் பார்ப்பது இல்லை. ஒழுக்கமாக இருந்தால், கூடுதலாக 10 ஆண்டுகள் வாழலாம் என போகும் இடங்களில் எல்லாம் அனைவருக்கும் நல்ல கருத்துக்களையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறார் பழம்பெரும் நடிகர் சிவகுமார். 82 வயதிலும் மார்க்கண்டேயன் என்கிற பட்டப் பெயருக்கு ஏற்றார் போல செம ஆக்டிவாகவும் ஃபிட்டாகவும் உடல் ஆரோக்கியத்துடன் அவர் இருப்பதை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

கோபம் மட்டும் குறையவே இல்லை: ஆனால், சிவகுமாருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை என்றால் அது அவருடைய கோபம் தான் என்கின்றனர். முன்னதாக ஆசை ஆசையாய் செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை தூக்கி வீசி எறிந்த சிவகுமார் மீண்டும் அதே போல கோபத்தில் நடந்துக் கொண்டது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

Sivakumar shows his anger on a fan video shocks netizens

சால்வையை தூக்கி எறிந்த சிவகுமார்: நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையான சிவகுமார் சமீபத்தில் கார்த்தி 27 பட பூஜையில் கலந்து கொண்டார். அந்த வீடியோவில் சிரித்த முகமாக இருக்கும் சிவகுமார் காரைக்குடியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட போது ரசிகர் ஒருவரின் சால்வையை பார்த்து கடுப்பாகி அதை தூக்கி வீசி எறியும் வீடியோ தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பழ. கருப்பையா காலில் விழுந்து: பழ. கருப்பையாவின் காலில் விழுந்து சிவகுமார் தொட்டு வணங்கும் காட்சியும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சிவகுமாரை விட சில வயது இளையவர் தான் பழ. கருப்பையா என்கின்றனர். ஒரு பக்கம் காலில் விழும் சிவகுமார் இன்னொரு பக்கம் இப்படி எரிந்து விழுகிறாரே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X