மீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார்.. களத்தில் குதித்த நெட்டிசன்கள்!
Recommended Video

சென்னை: நடிகர் சிவகுமார் மீண்டும் செல்போனை தட்டிவிட்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற நடிகர் சிவகுமாரை பார்த்த ஒருவர் தனது செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். இதை பார்த்த சிவகுமார் அவரின் செல்போனை தட்டிவிட்டுள்ளார்.
அவர் செல்போனை தட்டிவிட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

செல்போன்
சிவகுமாருக்கு செல்போன் என்றாலே பிடிக்காது போன்று. தட்டிவிட்டுச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிவகுமார்
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க வாலிபர் ஒருவர் முயன்றார். அப்போது அவர் அந்த வாலிபரின் செல்போனை தட்டிவிட்டார். இதையடுத்து தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்த சிவகுமார் அந்த வாலிபருக்கு புது செல்போன் வாங்கிக் கொடுத்தார்.
பக்ஷிராஜன்
2.0 படத்தில் வந்த பக்ஷிராஜனின் ரசிகராக இருப்பாரோ சிவகுமார் என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.
ஆவி
அந்த நபருக்கு சிவகுமார் புது செல்போன் வாங்கிக் கொடுப்பார் என்கிறார்கள் நெட்டிசன்கள். தொடர்ந்து அவர் இப்படி செல்போனை தட்டிவிடுவதை பலரும் கண்டித்துள்ளனர். பக்ஷிராஜனின் ஆவி சிவகுமாருக்குள் உள்ளது என்று பலர் விமர்சித்துள்ளனர்.
கார்த்தி
சிவகுமார் செய்த காரியத்திற்கு அவரின் மகன்களான சூர்யா, கார்த்தியிடம் புகார் தெரிவிக்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











