சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி!

தலைமைச் செயலகத்தில் இன்று இந்த நிதியை நேரில் வழங்கினர் சிவகுமார் குடும்பத்தினர்.
தானே புயல் பாதித்த கடலூர் மற்றும் விழுப்புரம் மக்களின் துயர் துடைக்க அனைத்து தரப்பினரும் பெரும் நிதி உதவியை முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கிவருகின்றனர். இதுவரை ரூ 53 கோடி அளவுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் பலர் மனமார உதவி அளித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் சிவகுமார் குடும்பமும் இன்று ரூ 25 லட்சம் வழங்கியது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நடிகர்கள் சிவகுமார், அவரது மகன்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர், தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ 25 லட்சத்துக்கான காசோலையை இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினர்," என்று குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











