சூர்யாவுக்கு 4 வார்த்தைக் கூட ஒழுங்கா பேச தெரியாது.. மகன் குறித்து அப்படி பேசிய சிவகுமார்!

சென்னை: தனது மகன் சூர்யாவுக்கு 4 வார்த்தைக் கூட ஒழுங்கா பேச வராது. அவர் குறித்து ரொம்பவே பயந்து இருந்தேன். ஆனால், இன்றைக்கு அவர் இருக்கும் நிலை எனக்கு ரொம்பவே வியப்பை கொடுத்திருக்கிறது என நடிகர் சிவகுமார் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

Recommended Video

சூர்யாவை பற்றிய ரகசியத்தை சொன்ன சிவகுமார் | Oh My Dog | Arun Vijay

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள ஓ மை டாக் படம் விரைவில் வெளியாக உள்ளது.

கடந்த ஆண்டு ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன்பிறப்பே, ஜெய்பீம் என வரிசையாக மாதம் ஒரு படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஓ மை டாக்

ஓ மை டாக்

அருண் விஜய் மற்றும் அருண் விஜய் மகன் நடிப்பில் உருவான ஓ மை டாக் திரைப்படமும் அமேசான் பிரைம் ஓடிடியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த படத்தின் வெளியீட்டை அப்படியே 2டி நிறுவனம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில், விரைவில் அந்த படம் வெளியாக போகிறது.

ஆடியோ லாஞ்ச்

ஆடியோ லாஞ்ச்

ஓ மை டாக் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் அருண் விஜய்யின் மகன் அனைவர் முன்னிலையிலும் விழுந்து என்னை ஆசிர்வதியுங்கள் என கேட்டுக் கொண்டு வாழ்த்து பெற்றார். தாத்தா மற்றும் அப்பா உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் என்றும் பேசினார்.

சிவகுமார் நெகிழ்ச்சி

சிவகுமார் நெகிழ்ச்சி

2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள ஓ மை டாக் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகுமார் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு மகன் சூர்யா குறித்து பேசியது மிகப்பெரிய அதிர்வலையை எழுப்பி உள்ளது. சிறு வயதில் நடிகர் சூர்யா எப்படி இருந்தார் என்பது குறித்தும், சினிமாவில் நடிக்க வருவார் என்றே தான் எதிர்பார்க்கவில்லை என்பது குறித்தும் பேசினார் சிவகுமார்.

4 வார்த்தைக் கூட

4 வார்த்தைக் கூட

நடிகர் சூர்யா சிறுவனாக இருந்த போது முழுசா 4 வார்த்தைக் கூட பேச தெரியாது என்றும், பள்ளியில் அவரை சேர்க்க படாதபாடு பட்டதை குறித்தும் பேசினார். தனியார் பள்ளி ஒன்றில் காசு வாங்கி வைத்துக் கொண்ட பிறகும் நடிகர் சூர்யாவுக்கு அட்மிஷன் தர யோசித்தது பற்றியும் இந்த விழாவில் சிவகுமார் பேசினார்.

சூர்யாவுக்கு கிடைத்த விமர்சனம்

சூர்யாவுக்கு கிடைத்த விமர்சனம்

எப்படியோ தட்டித் தடுமாறி படிப்பை முடித்த சூர்யா சினிமாவுக்கு வர ஆசைப்படவே இல்லை. கார்மென்ட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இயக்குநர் வசந்த் ரொம்ப ராவான முகத்தை நடிக்க வைக்க தேடிக் கொண்டிருந்த நிலையில் தான் சூர்யாவை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். தியேட்டரில் செகண்ட் ஷோ முடிந்த நிலையில், ரசிகர்களின் ரியாக்‌ஷனுக்காக வெளியே நின்றிருந்த சூர்யாவிடம் ஒரு ரசிகர் வந்து ரொம்ப சொதப்பிட்டீங்க என சொன்ன விமர்சனம் தான் அவருக்கு கிடைத்த முதல் விமர்சனம்.

ஜெய்பீம் சூர்யா

அப்படி இருந்தா சூர்யா இப்போ ஜெய்பீம் போன்ற ஒரு படத்தில் இந்த அளவுக்கு நடிப்பார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. சூர்யாவின் இந்த வளர்ச்சி என்னை ரொம்பவும் பெருமைப்படுத்தி உள்ளது என நடிகர் சிவகுமார் நெகிழ்ச்சியுடன் பேசியது அனைவரது கவனத்தையும் ஒட்டுமொத்தமாக ஈர்த்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X