Suriya - சூர்யா பெரிய நடிகராக வருவார்.. ஆனால் அதையும் செய்வார்.. சிவக்குமாருக்கு ஷாக் கொடுத்த ஜோசியர்
சென்னை: கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் சூர்யா. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதனையடுத்து வணங்கான் படத்தில் கமிட்டாகி பிறகு வெளியேறிய அவர் தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் பல மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு பிறகு புறநானூறு படத்தில் நடிக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா திறமையான நடிகர் என்ற பெயரை எடுத்தவர். நந்தா படத்தின் மூலம் அவரது திறமை எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்க தற்போது கோலிவுட்டின் டாப் 5 நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். சமீபகாலமாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்துமே சமூக அக்கறையுள்ள கதைகளாக இருக்கின்றன. குறிப்பாக ஜெய்பீம் படம் சூர்யாவுக்கு மிகச்சிறந்த பெயரை பெற்றுக்கொடுத்தது. அதேபோல் சூரரைப்போற்று படம் தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது அவருக்கு.

ஆர்வமில்லை: தற்போது கங்குவா படத்தில் நடித்திருக்கும் அவர் அடுத்ததாக புறநானூறு படத்தில் நடிக்கிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படட்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். ஆனால் அதிலிருந்து விலகிவிட்டதாக புதிய தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்படி படு பிஸியான நடிகராக வலம் வரும் சூர்யா ஆரம்பத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். ஆனால் காலம் அவரை சினிமாவுக்கு அழைத்து வந்து ஜோதிகாவை காதலித்து திருமணமும் செய்ய வைத்தது.
சிறந்த ஜோடி: சூர்யா - ஜோதிகா கோலிவுட்டின் சிறந்த ஜோடியாக வலம்வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கிறார்கள். ஜோதிகாவும் தற்போது சினிமாவில் பிஸியாகியிருக்கிறார். சூர்யா சிறந்த கணவர். எனது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறார் என்று ஜோதிகா ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு பேட்டியிலும் குறிப்பிட்டுவருகிறார். இந்தச் சூழலில் அவர்களது காதல் குறித்தும், சூர்யா நடிகரானது குறித்து சிவக்குமார் பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சிவக்குமார் பேச்சு: சில வருடங்களுக்கு முன்பு கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், "சிறு வயதில் சூர்யா ரொம்பவே அமைதியாக இருப்பார். அவருக்கு எதிலுமே விருப்பம் இருந்தது கிடையாது. அப்படிப்பட்ட நிலைமையில்தான் அவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒரு ஜோசியரிடம் சென்றேன். ஜாதகத்தை பார்த்த அவர், உங்கள் மகன் சினிமாவில் நடிப்பார் என்றார். எனக்கு ஆச்சரியம்தான் ஏற்பட்டது. நான் உடனே அவரிடம், நல்லா பார்த்து சொல்லுங்க, ஏனா அவன் 4 வார்த்தை சேர்ந்தாப்ல யார்ட்டையும் பேசமாட்டான் என்றேன்.
உங்களைவிட நல்ல நடிகர்: அதற்கு அந்த ஜோசியரோ, நான் சொல்வது பழிக்கும். கண்டிப்பாக அவர் நடிகராக வருவார். உங்களைவிட நல்ல நடிகராக உயர்ந்து நல்ல பெயர் வாங்குவார். உங்களைவிட அதிக சம்பளமும் வாங்குவார், அதிக விருதுகளையும் வாங்கி குவிப்பார் என்று சொல்லிவிட்டு கொஞ்சம் கேப் விட்டார். நான் உடனே என்ன சொல்லுங்க என்று கேட்டதற்கு, அவர் சினிமாவில் நடிப்பதுடன் மட்டுமின்றி காதலித்துதான் திருமணம் செய்துகொள்வார் என்று சொன்னார்.
அவர் சொன்னது நடந்தது: அந்த ஜோசியர் சொன்னது போலவே சூர்யா பெரிய நடிகராக உயர்ந்தார். என்னைவிட அதிக சம்பளம் வாங்கினார். காதல் திருமணமும் செய்துகொண்டார். அவர் சொன்னது அப்படியே நடந்ததே என்று நினைத்து அந்த ஜோசியரை தேடி சென்று வேட்டி சட்டை எடுத்துக்கொடுத்தோம்.
சூர்யா - ஜோதிகா காதலை பொறுத்தவரை அவர்கள் காதலித்ததோடு எங்களின் சம்மதத்துக்காக காத்திருந்தார்கள். நாங்கள் ஒத்துக்கொள்வதற்கு நான்கு வருடங்கள் ஆகின. அதுவரைக்கும் காத்திருந்தார்கள். ஒருகட்டத்தில் கல்யாணம் செய்துகொண்டால் ஒருவரை ஒருவர் செய்துகொள்வோம். இல்லையென்றால் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருக்கிறோம் என்று கூறினர். பிறகு ஒத்துக்கொண்டோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











