ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.. 55 வருடத்துக்கு முன் வசித்த வாடகை வீட்டில் பிரபல நடிகர் சிவகுமார்!

By

சென்னை: சென்னை வந்த புதிதில், தான் வசித்த வீட்டுக்குச் சென்று போட்டோ எடுத்து திரும்பி இருக்கிறார், நடிகர் சிவகுமார்.

நடிகர் சிவகுமார், சென்னை ஓவியகல்லூரியில் படித்தவர். அந்த காலகட்டத்தில் 1958 ஆம் ஆண்டு சென்னை புதுப்பேட்டையில் உள்ள திருவேங்கடம் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.

இப்போது சென்னையில் பிரமாண்டமான சொந்த வீட்டில் வசிக்கும் சிவகுமாருக்கு திடீரென்று பிளாஷ்பேக் ஞாபகத்துக்கு வந்தது.

பார்க்க வேண்டும்

பார்க்க வேண்டும்

இந்த வீடு நடிகர்கள் சூர்யா, கார்த்திக்கு கூட தெரியாதாம். இதையடுத்து சமீபத்தில் ஒரு நாள் இரவில், முகக்கவசம் அணிந்துக்கொண்டு அவர்களுடன் சென்று இந்த வீட்டைக் காண்பித்திருக்கிறார் நடிகர் சிவகுமார். அவர் மனைவியும் அந்த வீட்டைப் பார்க்கவில்லையாம். இதனால் பகலில் அந்த வீட்டுக்குப் போய் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது.

புகைப்படம்

புகைப்படம்

இதையடுத்து தனது மனைவியுடன் நேற்று அந்த வீட்டுக்குச் சென்ற நடிகர் சிவகுமார், தான் மட்டும் அந்த வீட்டு வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த வீடு இன்னும் பூட்டி கிடக்கிறது. அங்கு யாரும் இப்போது வசிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் சிவகுமார். 1958 ஆம் ஆண்டில் இருந்து 1965 வரை, மாதம் 15 ரூபாய் வாடகை கொடுத்து இந்த வீட்டில் வாழ்ந்துள்ளார்.

ஏராளமான ஓவியம்

ஏராளமான ஓவியம்

ஏழு வருடம் இந்த வீட்டில் வாழ்ந்தபோது ஏராளமான ஓவியங்களையும் வரைந்துள்ளார். அவர் வரைந்த அத்தனை ஓவியங்களும் இங்கிருக்கும்போது வரையப் பட்டவைதானாம். குறைந்த தேவைகளுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த அந்த நாட்கள் பொன்னானது என்று கூறுகிறார் நடிகர் சிவகுமார்.

மொத்த செலவு

மொத்த செலவு

டெல்லி முதல் கன்னியாகுமரி வரை சுற்றி.. அதாவது அஜந்தா, எல்லோரா, குதுப்மினார், பதேபூர் சிக்ரி என்று பல பகுதிகளுக்கும் சென்று ஓவியம் வரைந்திருக்கிறார் நடிகர் சிவகுமார். இப்போது ஸ்டார் ஓட்டலில் சாப்பிடச் சென்றால் ரூ.15 ஆயிரம் பில் வருகிறது, ஆனால், அப்போது இவ்வளவு இடங்களையும் சுற்றி வர ஆன மொத்த செலவு, வெறும் ரூ.7500 தான் என்கிறார், சிவகுமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X