சிவக்குமாரின் சபதம் 3வது சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியானது!

சென்னை : ஹிப்ஹாப் ஆதி அடுத்தடுத்து இரண்டு திரைப் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அதில் சிவகுமாரின் சபதம் என்ற படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார்.

சிவகுமாரின் சபதம் படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில் இப்போது மூன்றாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கதாநாயகனாக

கதாநாயகனாக

இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்து வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி தமிழ் சினிமாவுக்கு புதுமையான ஹிப் ஹாப் இசையை அறிமுகப்படுத்தியவர். ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் இப்போது படங்களில் கதாநாயகனாக வலம் வந்து கொண்டுள்ளார்.

சொந்த வாழ்க்கை

சொந்த வாழ்க்கை

மீசைய முறுக்கு என்ற படத்தை இயக்கி ஹீரோவாக அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் வர இசையமைப்பதை குறைத்துக்கொண்டு படங்களில் நடிப்பதில் அதிக கவனம் காட்டி வருகிறார். மேலும் மீசைய முறுக்கு திரைப்படம் ஆதியின் சொந்த வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்படுகிறது.

 சிவக்குமாரின் சபதம்

சிவக்குமாரின் சபதம்

மீசையமுறுக்கு வெற்றியைத் தொடர்ந்து நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இப்போது இரண்டாவது முறையாக சிவக்குமாரின் சபதம் என்ற படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்து வருகிறார். செம ஜாலியான கதை களத்தில் புல்லிங்கோ ஸ்டைலில் ஆதி இதில் நடித்திருக்க சத்ய ஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

ஜூலை 30ஆம் தேதி

ஜூலை 30ஆம் தேதி

சிவக்குமாரின் சபதம் படத்திலிருந்து ஏற்கனவே சிவக்குமார் பொண்டாட்டி மட்டும் பாகுபலிக்கொரு கட்டப்பா ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்பொழுது மூன்றாவது சிங்கிள் ட்ராக் பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது. "நெருப்பா இருப்பான்" என பெயரிடப்பட்டுள்ள மூன்றாவது பாடல் ஜூலை 30ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகிறது. மேலும் இது ஒரு ரொமான்டிக் பாடல் எனவும் புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X