சிவகுமாரின் சபதம் படத்தின் அடுத்த சிங்கிள் ரெடி.. தேதியை அறிவித்த ஹிப்ஹாப் ஆதி!

சென்னை : மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடித்துவரும் திரைப்படம் சிவகுமாரின் சபதம்.

சத்யஜோதி பிலிம்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்து வருகிறார். ஹீரோயினியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார்.

கடந்த படங்களைப் போலவே இந்தப் படமும் கலகலப்பான காமெடி திரைப்படமாக உருவாகி வர சிவகுமாரின் பொண்டாட்டி பாடலைத் தொடர்ந்து இரண்டாவது சிங்கில் பாடல் வெளியாகும் தேதியை ஹிப்ஹாப் ஆதி அறிவித்துள்ளார்.

தனி ஒருவன்

தனி ஒருவன்

தனது துள்ளலான ஹிப் ஹாப் இசையின் மூலம் இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டம் போட வைத்து வருபவர் ஹிப்ஹாப் ஆதி. ஆம்பள, தனி ஒருவன், இன்று நேற்று நாளை, கவண் என பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை அமைத்துள்ள இவர் இப்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வந்து கொண்டுள்ளார்.

ஹீரோவாகவும் இயக்குனராகவும்

ஹீரோவாகவும் இயக்குனராகவும்

மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி மற்ற படங்களுக்கு இசையமைப்பதைக் குறைத்து கொண்டு நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் மீசைய முறுக்கு வெற்றியை தொடர்ந்து வெளியான நட்பே துணையும் மாபெரும் வெற்றி பெற்றது. தெலுங்கில் ஏ ஒன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியானது.

சுமாரான வெற்றியை

சுமாரான வெற்றியை

ரசிகர்களும் ஆதியை ஹீரோவாக ஏற்றுக் கொண்டதை அறிந்து பல படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார். அதேசமயம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அறிமுக இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கடைசியாக இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராணா இயக்கத்தில் நான் சிரித்தால் வித்தியாசமான கதை களத்தில் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது.

பங்கமாக கலாய்க்கப்பட்டு

பங்கமாக கலாய்க்கப்பட்டு

இந்த நிலையில் இரண்டாவதாக ஆதி இயக்கி நடிக்கும் திரைப்படத்திற்கு சிவகுமாரின் சபதம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் இண்டி ரெபெல்ஸ் உடன் இணைந்து ஆதி தயாரித்து வருகிறார். முதல் பாடல் சிவகுமார் பொண்டாட்டி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இன்று வரை சமூக வலைதளங்களில் இடைவிடாது பங்கமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

ஜூலை 12 ரிலீஸ்

ஜூலை 12 ரிலீஸ்

சிவகுமார் பொண்டாட்டிக்கு வருகின்ற நெகட்டிவ் விமர்சனங்களை தகர்த்தெறிய அடுத்ததாக இரண்டாவது பாடலை ரிலீஸ் செய்ய உள்ளார். அதன்படி வரும் ஜூலை 12ம் தேதி "பாகுபலிக்கு ஒரு கட்டப்பா" என்ற சிங்கில் வெளியாகிறது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். போஸ்டரில் ப்ராங் ஸ்டார் ராகுல் கட்டப்பா கெட்டப்பிலும் ஹிப்ஹாப் ஆதி பாகுபலி கெட்டப்பிலும் இருக்க.. ராகுல் பாகுபலி படத்தில் வருவது போலவே வாளை எடுத்து ஆதியை முதுகில் குத்துகிறார். இந்த வித்தியாசமான போஸ்ருடன் ஆதி வெளியிட்டுள்ள "பாகுபலிக்கு ஒரு கட்டப்பா" பாடலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X