நாளை முதல் சிவநாகம்... கிராபிக்ஸில் உயிர்ப் பெற்று வரும் விஷ்ணுவர்தன்!
கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக மாறியிருக்கிறது மூன்று மொழிகளில் நாளை வெளியாகவிருக்கும் சிவநாகம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சிறப்பு, மறைந்த விஷ்ணுவர்தன் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளதுதான். பெரும் செலவு செய்து கிராபிக்ஸ் மூலம் அவரை உயிர்ப்பித்து நடிக்க வைத்துள்ளனர்.

விஷ்ணுவர்தனின் ரசிகர் பட்டாளத்துக்கு இந்தப் படம் பெரும் விருந்தாக இருக்கும் என்கிறார் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா. இந்தப் படம் கோடி ராமகிருஷ்ணாவின் 138 -வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் ரூ 40 கோடி செலவில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அம்மன், அருந்ததி படங்களைப் போல அத்தனை மொழிகளிலும் ஹிட்டடிக்கும் படமாக சிவநாகம் அமையும் என்கிறார் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.
Comments


Click it and Unblock the Notifications