“எதிர்கால தமிழ் சினிமா“… எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கய்யா.. கதறவிடும் மீம்ஸ்!

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பாப்புலரான சிவாங்கி அஸ்வின் ஜோடியை யாரும் தெரியாமல் இருக்க முடியாது.

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி மற்றும் அஸ்வினை கலாய்க்கும் மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

எந்த மாதிரியான சீரியஸ் சம்பவம் என்றாலும் ஒற்றை வரியில் ஒரு டயலாக் போட்டு அதை காமெடியாக்கி விடுகின்றனர் மீம் கிரியேட்டர்ஸ். டேய் எப்படிடா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க என்று மற்றவர்களை யோசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் இவர்களின் மீம்.

சிவாங்கி

சிவாங்கி

குழந்தை தனமான சிரிப்பினாலும் சேட்டையாலும் அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்தவர் சிவாங்கி. அதேபோல குக் வித் கோமாளி மூலம் கவனம் ஈர்த்தவர் அஸ்வின். சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த சிவாங்கி அஸ்வின் பின்னால் சுற்றுவதும் பாட்டுப்பாடுவதும் மிகவும் ரசிக்கும்படி இருக்கும் இவர்கள் இருவரின் அட்டகாசத்தை பார்க்கவே தனி ரசிகர் பாட்டாளம் உண்டு என்று சொல்லாம்.

திரைப்படங்களில்

திரைப்படங்களில்

இந்தநிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்றை அடுத்து அஸ்வின் தற்போது, என்ன சொல்ல போகிறாய் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதேசமயம், அஸ்வினின் குட்டி பட்டாஸ், அடிபொலிலி ஆல்பம் பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன. அதேபோல சிவாங்கியும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள டான் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார்.

எதிர்கால தமிழ் சினிமா

எதிர்கால தமிழ் சினிமா

இளைஞர்களின் மனதில் கலக்கல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் அஸ்வின் சிவாங்கியை கலாய்த்து மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. இதில், எதிர்கால தமிழ் சினிமா என்று தலைப்பிட்டு ஒரு பக்கத்தில் சூர்யா , ஜோதிகாவின் புகைப்படமும் மறுபக்கக்கத்தில் சிவாங்கி, அஸ்வின் புகைப்படத்தையும் வைத்து நக்கலடித்துள்ளனர்.

Recommended Video

Cook With Comali Season 3-ல் Pugazh இருக்காரா? இல்லையா? Chef Dhamu கொடுத்த விளக்கம்
ஜோடி பொருத்தம் சூப்பர்

ஜோடி பொருத்தம் சூப்பர்

மீம்ஸ்களுக்காக மீம் கிரியேட்டர்கள் தேர்வு செய்யும் போட்டோக்களும் வசனங்களும் அடடே என்று சொல்லும் அளவுக்கே இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த மீம்ஸ் இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த மீம்சை பார்த்த பலர் இவர்கள் இருவரின் ஜோடிப் பொருத்தத்தை சூப்பர் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X