ஒரே வாரத்தில் 3 படங்கள்... அசத்தும் ஜி.வி.பிரகாஷ் - பொறாமையில் முன்னணி ஹீரோக்கள்
சென்னை: ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஏற்கனவே ஐங்கரன், 100 % காதல் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது இவர் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை படமும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் சசி எடுக்கும் ஒவ்வொரு படமும் புதிய முயற்சி மட்டும் அல்ல, அந்த நடிகர்களுக்கு கிடைக்கும் நல்ல பயிற்சியும் கூட. சமீப காலமாக மல்டி ஸ்டார் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில், நடிகர் சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் இணைந்து, முதல் முறையாக நடித்து வரும் திரைப்படம். சிவப்பு மஞ்சள் பச்சை இந்த படத்தை பிச்சைக்காரன்', பூ, ரோஜாக்கூட்டம் போன்ற படங்களை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் சசி இயக்கி வருகிறார்.
இப்படத்தில் சித்தார்த் போக்குவரத்து காவலராக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் ஸ்ட்ரீட் பைக் ரேஸராக நடிக்கிறார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. பைக் ரேஸருக்கும் போக்குவரத்து காவலருக்கும் இடையில் ஏற்படும் மோதலை வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதோடு இப்படத்தில் அக்கா, தம்பி உறவினை புதிய கோணத்தில் வெளிப்படுத்தியுள்ளதாக இயக்குநர் சசி தெரிவித்துள்ளார்.
சித்தார்த்தும் ஜி.வி.பிகாஷும் இணைந்து பல அற்புதமான காட்சிகள் செய்து உள்ளார்கள். சமூக கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் மலையாள நடிகை லிஜோ மோல் மற்றும் காஷ்மிரா என்கிற இரண்டு புதுமுக நடிகைகள் தமிழில் அறிமுகமாக உள்ளனர். மேலும் இப்படித்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ராக்காச்சி ரங்கம்மா என்ற பாடல் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் ஏற்கனவே சென்சாருக்கு அனுப்பப்பட்டு யு சர்டிபிகேட் பெற்றுள்ள நிலையில், இந்த படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு சித்து குமார் புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் சசி கொடுக்கும் ஒவ்வொரு படைப்புக்கும் நீண்ட இடைவிழி இருக்கும். இருந்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். இந்த படம் ஒரு நல்ல வெற்றி படமாக வர வேண்டும். பல விருதுகள் வாங்க வேண்டும் என்று பலர் சினிமா வட்டாரத்தில் கூறுகிறார்கள். அதோடு அடுத்தடுத்த நாளில் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷின் 3 படங்கள் வெளியாவது தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது


Click it and Unblock the Notifications











