Captain Miller Update - கேப்டன் மில்லர் அப்டேட்.. ஷூட்டிங்கை முடித்தார் ராஜ்குமார்

சென்னை: Captain Miller Update (கேப்டன் மில்லர் அப்டேட்) கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவந்த கன்னட ராஜ்குமார் தனது போர்ஷனை முடித்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த உயரங்களுக்கு அவர் சென்றுவிட்டார். இதனால் அவருக்கென்று ரசிகர் பட்டாளம் அதிகரித்திருக்கிறது. முக்கியமாக இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்றும் தனுஷ் பெயர் பெற்றிருக்கிறார். ஆரம்பத்தில் அவர் கடுமையான உருவ கேலிகளை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதை கண்டுகொள்ளாமல் தனது திறமையை வளர்த்து வளர்ந்திருக்கிறார்.

 Sivarajkumar Complete his portion in Captain Miller Movie

வாத்தி கொடுத்த அடி: தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை உயர்த்தும் நோக்கத்தில் அவர் கடைசியாக வாத்தி என்ற படத்தில் நடித்தார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் பெரும் தோல்வி படமாக அமைந்தது. தெலுங்கு படமா இல்லை தமிழ் படமா என்ற குழப்பம் படம் முழுக்க இருந்தது. அதனால் படத்தை ரசிகர்களால் தங்களுடன் எளிதாக கனெக்ட் செய்துகொள்ள முடியவில்லை. இது படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கேப்டன் மில்லர்: வாத்தி படத்தின் தோல்வியடைந்ததை அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை சாணிக்காயிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். பீரியட் படமாக இந்தப் படம் உருவாகும் என கூறப்பட்டிருப்பதால் இந்தப் படத்தின் மீது தனுஷ் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர்.

தொடரும் சிக்கல்: தான் இயக்கிய முதல் இரண்டு படங்களிலேயே சிறந்த இயக்குநர் என்ற பெயரை எடுத்துவிட்டார் அருண் மாதேஸ்வரன். எனவே தனுஷ் எனும் மிகச்சிறந்த நடிகருடன் இணைந்திருக்கும் கேப்டன் மில்லர் முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எண்ணுகின்றனர். படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து அப்படத்துக்கு சிக்கல் எழுந்துவருகிறது. இருப்பினும் அவைகளை எல்லாம் தாண்டி படம் வேகமாக வளர்ந்துவருகிறது இப்போது மதுரையில் நடந்துவரும் ஷூட்டிங்கில் தனுஷ் கலந்துகொண்டிருக்கிறார்.

படத்தில் யார் யார்: கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்த ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் சிவராஜ்குமார் கேப்டன் மில்லரில் தனது போர்ஷனுக்கான ஷூட்டிங்கை முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்: இதற்கிடையே தனுஷின் பிறந்தநாள் ஜூலை 28ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. எனவே அன்றைய தினம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோ இல்லை க்ளிம்ப்ஸ் வீடியோவோ வெளியாகலாம் என சில நாட்கள் முன்பு ஒரு தகவல் சிறகடிததது குறிப்பிடத்தக்கது. சிவராஜ்குமார் இந்தப் படத்தை தவிர்த்து ரஜினி நடித்த ஜெயிலர் படத்திலும் நடித்திருக்கிறார். அந்தப் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X