ஆபிஸ்லயே படுத்து தூங்கிடுறானுங்க.. அனிருத்தின் வேற மாறி கலாய்.. சிவகார்த்திகேயனின் ’சோ பேபி’ வருது!

சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படம் வருவதற்கு முன்னாடியே செல்லம்மா வீடியோவும் தற்போது வெளியாகி உள்ள 'சோ பேபி' பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களை என்டர்டெயின்மென்ட் செய்து வருகிறது.

சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் டாக்டர் திரைப்படம் வரும் மார்ச் 26ம் தேதி ரிலீசாகிறது.

அனிருத் இசையில் வரும் பிப்ரவரி 25ம் தேதி 'சோ பேபி' பாடல் வெளியாகும் அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

டார்க் காமெடி

டார்க் காமெடி

நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா எனும் டார்க் காமெடி படத்தை கொடுத்த இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் என்ன செய்ய காத்திருக்கிறார் என்பதை காண ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் காத்திருக்கின்றனர். வரும் மார்ச் 26ம் தேதி திரையரங்குகளில் டாக்டர் திரைப்படம் வெளியாகிறது.

டிக்டாக் தடை

டிக்டாக் தடை

டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை போட்ட உடனே, அதை லீடாக வைத்து அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் உருவான செல்லம்மா பாடல் வேற லெவல் ஹிட்டானது. லிரிக் வீடியோவுக்காக இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் செய்த வேற மாறி அலப்பறை ரசிகர்களை ரசிக்க வைத்தது.

சோ பேபி

சோ பேபி

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் செகண்ட் சிங்கிளான 'சோ பேபி' பாடல் வரும் பிப்ரவரி 25ம் தேதி வெளியாகும் அறிவிப்புக்கு மீண்டும் அந்த மூவரும் இணைந்து செய்துள்ள அரட்டை வீடியோ தற்போது ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்து வருகிறது. லிரிக் வீடியோவிலேயே இப்படி ரகளை செய்யும் நெல்சன், டாக்டர் படத்தில் வேற லெவல் காமெடிகளை அடுக்கி இருப்பார் என்பது நிச்சயம்.

படுத்து தூங்கிடுறானுங்க

படுத்து தூங்கிடுறானுங்க

ராக்ஸ்டார் அனிருத்தின் ஸ்டூடியோவில் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு பண்ண அலப்பறை போதாது என இரண்டாவது சிங்கிளுக்கும் இயக்குநர் நெல்சன் வேற மாறி அட்டகாசத்தை ஆரம்பித்துள்ளார். ஸ்விக்கியில் சோறு ஆர்டர் பண்னிட்டு உட்கார்ந்திருக்கும் அவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நடக்கும் உரையாடல் மற்றும் ஸ்டூடியோவில வந்து படுத்து தூங்கிடுறானுங்க என அனிருத் நெல்சனை பங்கம் பண்ணும் காட்சிகள் செம நக்கல்.

நோ பட்ஜெட்

மினிமம் பட்ஜெட்ல பாட்டு போடணுமா என அனிருத் கேட்க, நோ பட்ஜெட்ல பாட்டு போடணும் என்று சொல்லி, காசு வாங்காம லிரிக்ஸ் யார் எழுதுவான்னு கேட்டு, மீண்டும் சிவகார்த்திகேயனே 'சோ பேபி' பாட்டையும் எழுதும் வாய்ப்பை வேற வழியில்லாமல் பெறுவது போல போடும் சீன்கள் செம.. கலைமாமணியும் விட்டு வைக்கல! சிவகார்த்திகேயனின் வரிகளில் 'சோ பேபி' பாடல் கிளாஸிக்கல் வெஸ்டர்ன் ஃப்யூஷனாக எப்படி வருதுன்னு பார்ப்போம்.

தளபதி 65 அப்டேட்

தளபதி 65 அப்டேட்

டாக்டர் படத்தை தொடர்ந்து தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் பேனரில் இயக்கப் போவது இயக்குநர் நெல்சன் என்பதால், சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இணையாக டாக்டர் படத்தை காண விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தளபதி 65 படமும் பக்கா மாஸ் டார்க் காமெடியாக உருவாகும் என்றே எதிர்பார்க்கின்றனர். தளபதி 65 படத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படம் குறித்த அப்டேட்டை கேட்க ஆரம்பித்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X