அந்த கசகசா சூப்பர்.. சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சனின் வேற மாறி காம்போ.. டிரெண்டாகும் ‘சோ பேபி’!

சென்னை: சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் அடுத்த சிங்கிளான சோ பேபி பாடல் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் டாக்டர் திரைப்படம் வரும் மார்ச் 26ம் தேதி ரிலீசாகிறது.

சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் அனந்த கிருஷ்ணன் இணைந்து பாடிய 'சோ பேபி' பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

வேற மாறி அலப்பறை

வேற மாறி அலப்பறை

அனிருத் ஸ்டூடியோவில் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு பண்ண அலப்பறை போதாது என அடுத்த சிங்கிளுக்கும் இயக்குநர் நெல்சன் வேற மாறி அலப்பறை செய்துள்ளார். ஸ்விக்கியில் சோறு ஆர்டர் பண்ணிட்டு உட்கார்ந்திருக்கும் அவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நடக்கும் உரையாடல் மற்றும் ஸ்டூடியோவில வந்து படுத்து தூங்கிடுறானுங்க என அனிருத் நெல்சனை பங்கம் பண்ணும் காட்சிகளுடன் பாடல் தொடங்குகிறது.

செம லிரிக்ஸ்

செம லிரிக்ஸ்

தயாரிப்பாளர், ஹீரோ என்பதாலே சிவகார்த்திகேயனுக்கும் இஷ்டத்துக்கு அவரே அவர் படத்துக்கு பாடல் எழுதுகிறார் என்கிற விமர்சனங்களை எல்லாம் சுக்கு நூறாக உடைக்கும் விதமாக சோ பேபி பாடலுக்கு சூப்பரான வரிகளை எழுதி அசத்தி உள்ளார். இதற்கு முன்பும் சிவகார்த்திகேயனின் வரிகள் குழந்தைகளையும் இளைஞர்களையும் குஷிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இவருக்குள்ள இத்தனை திறமையா

இவருக்குள்ள இத்தனை திறமையா

டாக்டர் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயனை சீனியர் ஹீரோக்கள் முதல் அறிமுக நடிகர்களும் வியந்து பார்க்கும் விதமாகத் தான் வளர்ந்துள்ளார். இவ்ளோ சீக்கிரமாகவே கலைமாமணி விருது பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன், சினிமாவில் ஹீரோ, பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என கலக்கி வருகிறார். சீக்கிரமே ஒரு படத்தை இயக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

கசகசா சூப்பர்

சோ பேபி பாடல் வெளியிடும் முன்னதாகவே அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சனின் காமெடி அரட்டை வீடியோ வெளியாகி வைரலான நிலையில், சோ பேபி பாடல் முடிந்ததும், ஏதாவது கடைசி பன்ச் இருக்கும் என்று நினைத்த ரசிகர்களை ஏமாற்றாமல், அனிருத் சுவரத்தோடு போட்ட பாடலை அந்த கசகசா சூப்பர் சார் என மசாலா தூவிச் சென்றது வேற மாறி ரகளை.

டிரெண்டிங்கில் முதலிடம்

டிரெண்டிங்கில் முதலிடம்

நேற்று மாலை சொன்ன நேரத்துக்கு பதிலாக சில பல சேட்டைகளை செய்து தாமதமாக ரிலீஸ் செய்த லிரிக் வீடியோ யூடியூப் டிரெண்டிங்கில் 2.6 மில்லியன் வியூக்களுடன் முதலிடம் பிடித்துள்ளது. சிவகார்த்திகேயன் நாயகி பிரியங்கா மோகனை பார்த்து உருகுகிறாரோ இல்லையோ தமிழ்நாட்டு இளைஞர்கள் மொத்தமும் அவர் அழகில் மயங்கி போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X