அண்ணான்னு மட்டும் கூப்பிடாத.. சாய் பல்லவியிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்.. மனைவி ரியாக்‌ஷன் என்ன?

சென்னை: அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தளபதி விஜய்க்கு எப்படியொரு என்ட்ரி இருக்குமோ அந்தளவுக்கு சிவகார்த்திகேயன் என்ட்ரி அமைந்தது. மேலும், விஜய் பேசுவது போலவே ஒவ்வொரு நபரையும் தனியாக குறிப்பிட்டு அவர்கள் பற்றிய நினைவுகளுடன் பேசுவது, பஞ்ச் கொடுப்பது என சிவகார்த்திகேயன் தனது ஸ்டைலை துப்பாக்கி வாங்கியதில் இருந்தே மாற்றிவிட்டார் என்றே தெரிகிறது.

வெல்கம் டு பிக் லீக் என நடிகர் அஜித் குமார் சொன்னதையும் கவனமாக சிவகார்த்திகேயன் சொல்ல காரணமே தான் ஜெயம் ரவி, கவின் ரேஞ்சுக்கான நடிகன் இல்லை என்பதை மறைமுகமாக உணர்த்தவே என்றும் நெட்டிசன்கள் டிகோட் செய்து வருகின்றனர்.

sivakarthikeyan sai pallavi amaran

கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, நயன்தாரா, வரலட்சுமி சரத்குமார் என விஜய் எப்படி ஹீரோயின்களை ஹைலைட் செய்து பேசுவாரோ அதே போல சிவகார்த்திகேயன் சாய் பல்லவி ஒரு பிராண்ட் என்றும் பிரேமம் படத்தின் சமயத்தில் நடந்த ஒரு ஃபோன் உரையாடல் குட்டி ஸ்டோரியையும் சொல்லி அரங்கை அதிர வைத்தார்.

அமரன் ஆடியோ லான்ச்: கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

சாய் பல்லவி: அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனுக்கு அக்கா மாதிரி இருப்பாரே சாய் பல்லவி இவரா ஜோடி என ரசிகர்கள் யோசித்தனர். ஆனால், படத்தில் ராணுவ வீரனாக முரட்டுத்தனமான உடல்வாகு கொண்டு சிவகார்த்திகேயன் கம்பீரமாக வந்து நிற்க சாய் பல்லவி முகுந்த் மனைவி கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி விட்டார்.

அண்ணான்னு கூப்பிடாத: விஜய் டிவியின் உங்களில் அடுத்து யார் பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக நடித்த சாய் பல்லவி தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்னதாக மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து பிரபலமானார். பிரேமம் படத்தை பார்த்து விட்டு அந்த மலர் டீச்சர் மயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவிக்கு ஃபோன் செய்து சாய் பல்லவி நல்லா நடிச்சிருக்கீங்க என்றவுடனே அண்ணா தேங்க்யூண்ணா என்றார். நான் உடனே ஷாக் ஆகிட்டேன். அண்ணான்னு மட்டும் கூப்பிடாத, அந்த படத்துல வர மாதிரி என்ன மறந்து கூட போயிடுன்னு சொன்னேன்.

அப்போ சொன்னது இப்போ நனவாகிடுச்சு: ஃப்யூச்சர்ல நீயும் நானும் ஜோடியாக கூட நடிக்கலாம்னும் ஒரு பிட்டு போட்டேன். அப்போ சொன்னது இப்போ நனவாகிடுச்சு. சாய் பல்லவி நடிகை, ஸ்டார் என்பதெல்லாம் தாண்டி தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தையே அவர் உருவாக்கி வைத்திருக்கிறார். சாய் பல்லவின்னாலே அது ஒரு பிராண்ட் என சிவகார்த்திகேயன் பாராட்ட சாய் பல்லவி கன்னம் எல்லாம் வெட்கத்தில் சிவந்து போய் விட்டது.

மனைவி ரியாக்‌ஷன்: சிவகார்த்திகேயன் சாய் பல்லவி பற்றியும் பிரேமம் பட மலர் டீச்சர் பற்றியும் பேச பேச கேமராமேன் சிவகார்த்திகேயனின் மனைவி ரியாக்‌ஷனை ஃபோகஸ் செய்து காட்டியது தான் செம ஹைலைட். வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு என்பது போல சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி பார்த்ததை ரசிகர்கள் ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X