சிவகார்த்திகேயன் வெளியிட்ட ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ ஃபர்ஸ்ட் லுக் #HappyFriendshipDay2020

சென்னை: நண்பர்கள் தினத்தை முன்னிட்டு 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நண்பர்கள் தினம் கடந்த ஜூலை 30ம் தேதி கொண்டாடப்பட்டது இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை தான் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சர்வதேச நண்பர்கள் தினத்தை கொண்டாடிய இந்தியர்கள், இன்றும் நண்பர்கள் தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

நண்பர்கள் தினம்

நண்பர்கள் தினம்

நண்பர்கள் தினம் இன்று இந்தியாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. Happy Friendship day வாழ்த்துக்களை நண்பர்கள் சமூக வலைதளங்கல் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர். #HappyFriendshipDay2020 என்ற ஹாஷ்டேக்கும் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. நண்பர்களுக்கான இந்த நாளில், நட்பை பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

நண்பன் ஒருவன் வந்த பிறகு

நண்பன் ஒருவன் வந்த பிறகு

மீசையை முறுக்கு படத்தில் நடிகர் ஆதியின் தம்பியாக நடித்த நடிகர் ஆனந்த், இயக்கும் அறிமுக படம் "நண்பன் ஒருவன் வந்த பிறகு" இந்த படத்தில் நாயகனாக ஆர்.ஜே. விஜய் மற்றும் நாயகியாக பவானி ஸ்ரீ ஆகிய இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

ஒயிட் ஃபெதர் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன், நண்பர்கள் தின பரிசாக வெளியிட்டுள்ள நிலையில், அவரது ரசிகர்கள், அந்த படத்தின் போஸ்டரை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜி.வி. பிரகாஷ் தங்கச்சி

ஜி.வி. பிரகாஷ் தங்கச்சி

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள க/பெ. ரணசிங்கம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைர்லானது. அந்த படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் தங்கச்சி பவானி ஸ்ரீ முக்கிய வேடத்தில் நடித்துள்ள விஷயமும் வைரலானது. தற்போது வைரலாகி வரும் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் நாயகியும் பவானி ஸ்ரீ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

செம டைட்டில்

செம டைட்டில்

ஏ.ஆர். ரஹ்மான் காதல் தேசம் படத்திற்கு போட்ட முஸ்தபா முஸ்தபா எனும் பிரண்ட்ஷிப் ஆந்தமில் இடம்பெற்ற "நண்பன் ஒருவன் வந்த பிறகு" என்ற வரிகளை படத்தின் டைட்டிலாக வைத்துள்ளனர். மேலும், 1992 முதல் இன்ஃபினிட்டி என்ற சிம்பிளும் டைட்டிலில் இடம்பிடித்து இருப்பதால், இது 90ஸ் கிட்ஸ்களுக்கான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X