அடுத்த மாதம் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்.. எந்த தேதியில் தெரியுமா?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் புரொடக்சன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள டாக்டர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி உள்ளார்.

நடிகை பிரியங்கா மோகன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அனிருத் இசை

அனிருத் இசை

அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் வேற லெவல் ஹிட் அடித்தது. அதிலும் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் அனிருத் பாடிய செல்லம்மா செல்லம்மா பாடல் குட்டி சுட்டீஸ் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கோலமாவு கோகிலா படத்திற்கும் அனிருத் தான் சிறப்பான ஆல்பத்தை போட்டுக் கொடுத்தார்.

இயக்குநர் நெல்சன்

இயக்குநர் நெல்சன்

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு இயக்குநராக செயல்பட்டு வந்த நெல்சன், நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தற்போது அவர் இயக்கத்தில் உருவாகி உள்ள சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ரிலீசுக்கு ரெடியாகி உள்ளது. அடுத்ததாக தளபதி விஜய்யின் 65வது படத்தை இயக்கவுள்ளார்.

பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன்

டோலிவுட் ஹீரோயினான பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். அடுத்ததாக இயக்குநர் பாண்டிராஜ் இயக்க உள்ள சூர்யாவின் 40வது படத்திலும் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் அர்ச்சனா

பிக் பாஸ் அர்ச்சனா

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் பிக் பாஸ் பிரபலமான அர்ச்சனா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். கோலமாவு கோகிலா திரைப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், நிஷா, ஜாக்குலின் என பலரும் காமெடியில் மிரட்டிய நிலையில், டாக்டர் படத்தில் அர்ச்சனாவுக்கும் முக்கிய ரோல் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

டாக்டர் படத்தின் டப்பிங் முடிந்து விட்டதாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், இன்று டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் 26ம் தேதி திரையரங்குகளில் டாக்டர் திரைப்படம் வெளியாகும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

காதலர் தினத்துக்கு

காதலர் தினத்துக்கு

டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன் அறிவித்துள்ள நிலையில், படத்தின் டீசர் அல்லது டிரைலர் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 26ம் தேதி டாக்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என்கிற அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்

விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்

டாக்டர் படத்தின் ரிலீஸை சிவகார்த்திகேயன் ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். டாக்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பையும் சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். தளபதி 65 படத்திற்கு முன்னதாக இயக்குநர் நெல்சன் இயக்கி உள்ள டாக்டர் படத்தை வேற லெவலில் வெற்றியடைய வைக்கவும் விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X