Madharaasi Day 3 Box Office: மதராஸி 3வது நாள் வசூல்.. உலக அளவில் சம்பவம் பண்ணும் நம்ம SK!
சென்னை: சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், பிஜு மேனன், வித்யூ ஜமால், டான்சிங் ரோஸ் ஷபீர், விக்ராந்த் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள படம் மதராஸி. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாகி இன்றோடு அதாவது செப்டம்பர் 8ஆம் தேதியுடன் நான்கு நாட்கள் ஆகிறது. இந்நிலையில் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
அமரன் படத்திற்கு பின்னர் மதராஸி படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது இயல்பாகவே எதிர்பார்ப்பு இருந்தது. இது மட்டும் இல்லாமல் அமரன் படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி சுமார் ரூபாய் 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது என்ற பேச்சு திரையுலகில் பரவலாக உள்ளது. இப்படி இருக்கும்போது, அமரன் படத்தின் வசூலை அடுத்து சிவகார்த்திகேயனின் சம்பளம் அதிகரித்துவிட்டது. அதிகமான சம்பளத்தை தக்கவைக்க வேண்டும் என்றால் மதராஸி படத்தின் வசூல் கிட்டதட்ட ரூபாய் 300 கோடிகளையாவது தொட வேண்டும். அப்படிப் பார்த்தால் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் அப்படியான வெற்றியை ஈட்டித் தரும் என்ற பேச்சுகள் பரவலாக உள்ளது.

படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கிய போது ரசிகர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. காரணம் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் கடைசி இரண்டு படங்களும் படு சொதப்பல் படங்களாக மாறிப்போனது இந்த இரண்டு படங்களின் சொதப்பலுக்கு அவரைக் காரணம் சொல்ல முடியாது. அரசியலுக்குச் செல்கிறேன் என்று ரஜினி எடுத்த முடிவு அதனால் ஏற்பட்ட நெருக்கடி, தர்பார் படம் சொதப்ப காரணமாக அமைந்தது. சிக்கந்தர் படத்தில் கதாநாயகனை முன்னிலைப்படுத்தும் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தால் படம் சொதப்பியது. அதனால் தான் ப்ரீ புக்கிங்கில் அந்த அளவுக்கு மந்தநிலை.
ரசிகர்கள் ஆதரவு: இப்படி இருக்கும்போது சிவகார்த்திகேயனோடு எந்த நெருக்கடியும் இல்லாமல் மதராஸி படத்தை எடுத்து முடித்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். சிவகார்த்திகேயனை முழுக்க முழுக்க ஆக்ஷன் கதாநாயகனாக மாற்றி உள்ளது மதராஸி. படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். படத்தின் ஒவ்வொரு சண்டைக் காட்சியும் மிகவும் தத்ரூபமாக இயல்பாக இருப்பதாக விமர்சகர்கள் பாராட்டி வருகிறார்கள். முதல் காட்சிக்குப் பின்னர் படத்திற்கு கிடைத்த வரவேற்பு என்பது படக்குழுவே எதிர்பார்க்காத வரவேற்பு என்று கூறலாம்.

வசூல்: படம் முதல் நாளில் மட்டும் தமிழ் நாட்டில் ரூபாய் 12.8 கோடிகள் கிராஸ் கலெக்ஷன் செய்தது என்று படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இரண்டாவது நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 50 கோடிகள் கிராஸ் கலெக்ஷன் செய்தது என்றும் படக்குழு அறிவித்தது. இந்நிலையில் படத்தின் மூன்றாவது நாள் வசூல் என்பது இந்தியாவில் மட்டும் சுமார், ரூபாய் 11 கோடிகளை வசூலித்திருக்கும் என்று சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. வார இறுதி நாளான நேற்று மட்டும் உலக அளவில் ரூபாய் 20 கோடிகள் முதல் 25 கோடிகள் வரை வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் உலக அளவில் படத்தின் கிராஸ் கலெக்ஷன் ரூபாய் 70 கோடிகளாவது இருக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











