இந்த வாரம் இவர்தானா? கடைசியில் நடந்த அதிரடி திருப்பம்.. பிக்பாஸ் வீட்டில் நாமினேட் ஆனவர்கள் லிஸ்ட்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் கடைசி நேரத்தில் நடந்த அதிரடி திருப்பத்தால் நாமினேட் ஆனவர்களின் லிஸ்ட்டில் மாற்றம் ஏற்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாய் நடந்த கால் செண்டர் டாஸ்க்கின் அடிப்படையில் கேபி, ஜித்தன் ரமேஷ், ரியோ, ஆஜித், சோம் ஆகியோர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நாமினேஷனில் தப்பித்தனர்.
மற்ற அனைத்து போட்டியாளர்களுமே நாமினேஷனில் இடம்பிடித்தனர். இந்நிலையில் கடைசி நேரத்தில் நாமினேஷன் புராசஸை மாற்றியமைத்தார் பிக்பாஸ்.

தப்பித்த ஆரி
அதாவது, ரேங்க் டாஸ்க்கில் முதல் இடத்தை பிடித்த ஆரியை, 60 நாள் டாஸ்க் நடைபெற்ற ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு அழைத்த பிக்பாஸ், அவர் ரேங்க் டாஸ்க்கில் முதல் இடத்தைப் பெற்றதால், எவிக்ஷன் புராசஸில் அவருக்கு சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படுவதாக கூறினார். அதன்படி அவர் நாமினேஷனில் இருந்து தப்பித்து தனக்கு பதிலாக மற்றொரு நபரை தேர்வு செய்யலாம் என அறிவித்தார்.

தட்டு கழுவுவதில்லை
இதனை தொடர்ந்து ரமேஷை நாமினேட் செய்த ஆரி, அவர் அவருடைய வேலைகளை கூட செய்வதில்லை. சாப்பிட்ட தட்டை கூட அவர் கழுவுவதில்லை, துணி துவைப்பது இல்லை. கம்ஃபர்ட் ஸோனிலேயே இருக்கிறார் என கூறி நாமினேட் செய்தார்.

சிக்கிய கேபி
அவரை தொடர்ந்து ரேங்க் டாஸ்க்கில் இரண்டாவது இடத்தை பிடித்த பாலாஜியை காப்பாற்றிய பிக்பாஸ், அவரையும் ஒருவரை நாமினேட் செய்ய சொன்னார். அதனை தொடர்ந்து கேபியை நாமினேட் செய்த பாலாஜி, அவர் டாஸ்க்கை ஃபன்னாக கொண்டு சென்றார் என்ற காரணத்தை முன் வைத்தார்.

சோம் நாமினேட்டட்
அடுத்தப்படியாக சனம் வெனியேறியதால் மூன்றாவது இடத்தை பிடித்த அர்ச்சனாவையும் காப்பாற்றிய பிக்பாஸ், அவரையும் நாமினேட் செய்யுமாறு கூறினார். அப்போது சோமை நாமினேட் செய்த அர்ச்சனா, அவருக்கு கேமில் இருந்த ஃபோகஸ் மிஸ்ஸிங் என்று காரணம் சொன்னார்.

மொத்தம் 6 பேர்
அனிதா இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆனதால் அவர் நாமினேஷனில் இருந்து தப்பித்தார். இதன் மூலம் இந்த வார நாமினேஷனில் ரம்யா, நிஷா, ஷிவானி, கேபி, ரமேஷ், சோம் என மொத்தம் 6 பேர் இடம் பெற்றுள்ளனர்.

டேஞ்சர் ஸோன்
இந்த 6 பேரில் ரம்யாவை தவிர மற்ற 5 பேருமே டேஞ்சர் ஸோனில் இருக்கும் போட்டியாளர்கள்தான். அதாவது ஷிவானி, ரமேஷ், சோம், கேபி, நிஷா ஆகியோர். அவர்களில் அர்ச்சனா கேங்கை சேர்ந்த ரமேஷ், சோம், கேபி, நிஷா ஆகிய 4 பேரில் ஒருவரை வெளியேற்ற மக்கள் ஆர்வமாய் உள்ளனர்.

ஜஸ்ட் மிஸ்ஸான ஜித்தன்
ஷிவானி கடந்த வாரமே வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்டார். முதல் முறை நாமினேஷனுக்கு வந்த ஜித்தன் ரமேஷ், ஜஸ்ட் மிஸ்ஸில் மிக சொற்ப எண்ணிக்கையிலான வாக்குகளின் அடிப்படையில் எவிக்ஷனில் இருந்து தப்பித்தார்.

ஆச்சரியமில்லை
அதனால் இந்த வாரம் ஜித்தன் ரமேஷ் வெளியேறலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் சோம் வெளியேறவும் வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரமே ஷிவானி காப்பாற்றப்பட்டதால் கடுப்பான ரசிகர்கள் விஜய் டிவியை திட்டி தீர்த்ததால் இந்த வாரம் அவரை வெளியேற்றினாலும் ஆச்சரியமில்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











