“கமலின் அரசியல் பிரவேசம், 22 கட், கேள்விகளுக்குப் பதில்”.. விஸ்வரூபம் 2 பார்க்க இதோ 6 காரணங்கள்!

விஸ்வரூபம் 2 படம் இன்று ரிலீசாகிறது.

Recommended Video

விஸ்வரூபம் 2 ஏன் பார்க்க வேண்டும்?...இதோ காரணங்கள்- வீடியோ

சென்னை: கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ரிலீசாகிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஏற்கனவே ரிலீசான டிரெய்லர் மற்றும் பாடல்கள், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. இதோ விஸ்வரூபம் படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பதற்கான ஆறு காரணங்கள்...

விஸ்வரூப வெற்றி:

விஸ்வரூப வெற்றி:

ஐந்து ஆண்டுகளுக்கு முன், கடந்த 2013ம் ஆண்டு பல தடைகளைத் தாண்டி வெற்றி பெற்றது விஸ்வரூபம் படம். ரூ. 220 கோடி ரூபாய் வசூலும் செய்தது. அப்போதிருந்தே இரண்டாம் பாகத்தை ஆர்வமுடம் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கினர். முதல் பாகம் ரிலீசிற்கு முன்னதாக பெரும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டது. தற்போது இரண்டாம் பாகம் சென்சாரில் 22 இடங்களில் வெட்டுகளுடன் தான் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்விகளுக்குப் பதில்:

கேள்விகளுக்குப் பதில்:

முதல் பாகத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையாகத் தான் இந்த இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. எனவே, முதல் பாகத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே இரண்டாம் பாகத்தை பார்க்கும் ஆவலில் இருக்கின்றனர். பாகுபலி படத்தின் முதல் பாகம் முடிந்து இரண்டாம் பாகத்தை எப்படி எதிர்பார்த்தார்களோ, அதைப் போலவே விஸ்வரூபம் 2 படத்திற்கும் எதிர்பார்ப்பு உள்ளது.

கமல் இயக்கி நடித்துள்ள படம்:

கமல் இயக்கி நடித்துள்ள படம்:

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் விஸ்வரூபம் 2ம் பாகம் என்பது ஒருபுறம் இருக்க, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீசாகும் கமல் படம் என்பதாலும் அவரது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கமலே இயக்கி, தயாரித்து, நடித்துள்ளது இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆகப் பார்க்கப் படுகிறது.

அரசியல் வசனங்கள்:

அரசியல் வசனங்கள்:

கமலின் அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாகவே இப்படம் பெரும்பாலும் தயாராகி விட்டது என்றே கூறலாம். ஆனபோதும், தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து, தீவிர அரசியலில் இறங்கியுள்ளார் கமல். அவரது அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு ரிலீசாகும் படம் என்பதால் ரசிகர்கள் மட்டுமின்றி, கட்சித் தொண்டர்களும் இப்படத்தை ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே, இப்படத்தில் அரசியல் வசனங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

திரைக்கதை:

திரைக்கதை:

கமலின் படம் என்றாலே நிச்சயம் அதில் வித்தியாசமான கதைக்களம், திரைக்கதை இருக்கும் என்பது பரவலான கருத்து. அந்தவகையில் இப்படத்தின் முதல் பாகத்திலும் திரைக்கதை சொல்லிய விதம் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் காட்சிகளிலும் அதன் பாதிப்புகள் தெரிவதால், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிப்ரான் இசை:

ஜிப்ரான் இசை:

முதல் பாகத்தில் இடம் பெற்ற ‘இவன் யாரென்று தெரிகிறதா?' பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. தற்போதும் கமலின் அரசியல் மேடைகளில் இப்பாடல் தவறாமல் இடம் பெறுகிறது. இரண்டாம் பாகத்திலும் அதே பாடல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது தவிர, ஜிப்ரான் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் என்பது டிரெய்லர் காட்சிகள் வாயிலாகவே உறுதியாகியுள்ளது. இதுவும் விஸ்வரூபம் 2 மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X