டாக்டர் பெண்ணை கரம் பிடித்த பிரபல இயக்குநர்.. சிவகார்த்திகேயன் முதல் சிவா வரை.. பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: சிக்ஸர் பட இயக்குநரான சாச்சியின் திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் முதல் சிவா வரை பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் சிக்ஸர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சாச்சி.

இந்தப் படத்தில் நடிகர் வைபவ், பலக் லால்வானி, சதீஷ், ராதா ரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.

ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி

ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி

இப்படம் மாலைக்கண் நோயால் பாதிக்கப்படும் நபர் தனது வாழ்க்கையிலும் காதலிலும் சந்திக்கும் துயரங்களை மைய்யப்படுத்தி காட்சியாக்கப்பட்டிருக்கும். ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி என கலந்து கட்டி இப்படம் இயக்கப்பட்டிருந்தது.

இயக்குர் சாச்சி திருமணம்

இயக்குர் சாச்சி திருமணம்

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநரான சாச்சிக்கு சென்னையில் நேற்று திருமணம் நடைபெற்றது. சரண்யா என்ற டாக்டர் பெண்ணை திருமணம் முடித்துள்ளார் இயக்குநர் சாச்சி.

நடிகர் சதீஷின் மைத்துனர்

நடிகர் சதீஷின் மைத்துனர்

கோவிலம்பாக்கத்தில் உள்ள விஜயராஜா திருமண மண்டபத்தில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. இயக்குநர் சாச்சி நகைச்சுவை நடிகர் சதீஷின் மைத்துனர் ஆவார். சாச்சியின் தங்கையை தான் நடிகர் சதீஷ் திருமணம் செய்துள்ளார்.

சிவ கார்த்திகேயன் பங்கேற்பு

சிவ கார்த்திகேயன் பங்கேற்பு

இந்நிலையில் சாச்சியின் திருமணத்தில் சினிமா பிரபலங்கள் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ், மிர்ச்சிசிவா, இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, அஜய் (நடன இயக்குனர்), நிப்பு சாமி, நடிகை ரித்விகா, வெண்பா, கிருத்திகா, அமுதவாணன், ஆகாஷ், தினேஷ் கண்ணன், ஜோமின், தீனா, பாலா, அசார், தங்கதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நெட்டிசன்கள் வாழ்த்து

நெட்டிசன்கள் வாழ்த்து

இயக்குநர் சாச்சியின் திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சாச்சியின் திருமண போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X