லாஸ் மாதிரி பொண்ணு வேனும்.. கவின் மாதிரி பாய்ஃபிரன்ட் இருக்கக்கூடாது! சதீஷ் வைரல் வீடியோ..மரண பங்கம்
சென்னை: பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை வைத்து நடிகர் சதீஷ் பேசுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களின் உண்மை முகங்கள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மக்களுக்கு தெரியவந்தது. அதன்படிபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா பயங்கரமாக கோப்பட்டார், சண்டைப்போட்டார்.
கவின் எப்போதும் பெண்களுடன் கடலைப் போடுவதும், அடிக்கடி காதலிகளை மாற்றுவதுமாக இருந்தார். இதேபோல் மோகன் வைத்யா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பெண் போட்டியாளர்களை அடிக்கடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

கவினுடன் கடலை
லாஸ்லியா டான்ஸ் ஆடுவது, கவினுடன் கடலைப் போடுவது, கவினை காதலிப்பது என இருந்தார். சாண்டி மாஸ்டர் நண்பர்களுக்கு ஜால்ரா போட்டு வந்தார்.

சதீஷ் வசனம்
இந்நிலையில் சிக்ஸர் படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் வரும் ஒரு காட்சியை பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை வைத்து ட்ரோல் செய்திருக்கின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்ஸ். அதாவது, அந்தக்காட்சியில் நடிகர் சதீஷ், வில்லன் நடிகரிடம் கடலை சாப்பிட்டுக் கொண்டே வசனம் பேசுகிறார்.

லாஸ் மாதிரி பொண்ணு
அந்த வசனங்கள்தான் இந்த வீடியோவின் சிறப்பம்சம். அதாவது, எனக்கு ஒரு நல்லப் பொண்ணா பாரு.. 21 வயசுல.. லாஸ்லியா மாதிரி இருக்கனும்.. கவின் மாதிரி பாய் பிரன்ட் இருக்கக்கூடாது.. சிங்கிளாதான் இருக்கனும்.. மோகன் வைத்யா மாதிரி அப்பப்ப வான்ட்டடா வந்து கட்டிப்பிடிச்சு கிஸ் அடிக்கனும்..

வைரல் வீடியோ
அந்த மாதிரி ஒரு பொண்ணா பாரு.. கமிஷன பத்தி கவலைப்படாத.. நான் பாத்து நல்லா போட்டுத்தர்றேன்.. என்று பேசும் சதீஷ், பக்கத்தில் பார்த்து என்ன சாண்டி ஓகே வா.. என்பது போலவும், அதற்கு வில்லன் ஏய் என கத்திக்கொண்டு எழுந்து நிற்கிறார். அதற்கு ஏன்யா இப்படி வனிதா போல கோச்சிக்கிற என்று கேட்கிறார் சதீஷ். இப்படியான ஒரு ட்ரோல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











