சிக்ஸர் எல்லோருக்கும் பிடிக்கும்... யூடியூபில் கலக்கும் எங்கவேணா கோச்சிகினு போ போ போ...

Recommended Video

6 மணிக்கு முன்னாடி நல்லா..பண்ணார் | Vaibhav | Sixer Movie Press Meet

சென்னை: சிக்ஸர் படத்தில் மாலைக்கண் நோயால் அவதிப்படும் கதாநாயகன் வைபவ், அதனால் என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கிறார் என்பதை நகைச்சுவையோடு படமாக்கியுள்ளார்களாம். எத்தனையோ படங்களை ஜெயிக்க வைத்த தமிழ் சினிமா இந்த 'சிக்ஸர்' படத்தையும் ஜெயிக்க வைக்கும் என்றும், இந்த படக்குழுவும் ஜெயிக்கும் என்று தெரிவித்தனர்.

வால்மேட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரிக்க அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்கும் படம் சிக்ஸர்.

Sixer Movie will get sixer-movie makers

இப்படத்தில் பல்லோக் லாலாவானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ராதாரவி, இளவரசு, அஜய், சதீஷ், ராமர், ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஜனரஞ்சக படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் மாலைக்கண் நோயால் அவதிப்படும் கதாநாயகன் வைபவ், அதனால் என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கிறார் என்பதை நகைச்சுவையோடு படமாக்கியுள்ளனர்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஜோமின் படத்தொகுப்பு பணியை கவனித்துக் கொள்கிறார். சாம்-ராம்குமார் நடனம் அமைக்க, ஜி.கே.பிலோகன்-அன்பு இருவரும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். பசர் என்.கே.ராகுல் கலையை நிர்மானித்திருக்கிறார். இந்தப் படத்தை ட்ரைடன்ட் ஆர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Sixer Movie will get sixer-movie makers

சிக்ஸர் படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், இந்தப் படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய எங்கவேனா கோச்சிக்கினு போ போ போ என்ற பாடல் வெளியாக யூடியூபில் வைரலாகி வருகிறது. அதேபோல், இசையமைப்பாளர் அனிருத் இந்தப்படத்தில் பாபா பிளாக்சிப் என்ற ஒரு பாடலை பாடியுள்ளார்.

சிக்ஸர் படம் வரும் இம்மாதம் 30ஆம் தேதி வெளியாகிறது. பிரமாண்ட படைப்பான சாஹோ வெளியாகும் அன்று இப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு கடந்த வியாழனன்று நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர், இயக்குநர் சாச்சி, நாயகன் வைபவ் உள்ளிட்ட முக்கிய திரை உலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே இப்படம் நிச்சயம் சிக்ஸர் அடிக்கும் என்றும், எத்தனையோ படங்களை ஜெயிக்க வைத்த தமிழ் சினிமா இந்தப் படத்தையும் ஜெயிக்க வைக்கும் என்றும், இந்த படக்குழுவும் ஜெயிக்கும் என்றும் தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X