ஆதிபுருஷ் படத்தை பார்த்து நான் வெட்கப்படுகிறேன்.. படமா இது.. விளாசிய ரீல் ராமர்!

மும்பை: ஆதிபுருஷ் படத்தை பார்த்து உண்மையில் நான் வெட்கப்படுகிறேன் என்று சியா கே ராம் தொடரில் ராமராக நடித்த ஆஷிஷ் ஷர்மா கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகுபலி படத்திற்கு பின் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் பிரபாஸ், தற்போது நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படம் தான் ஆதிபுருஷ்.

பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். ராமாயணத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கப்பட்டுள்ளது.

Siya Ke Ram actor Aashiesh Sharrma slams Prabhas Adipurush

கடும் விமர்சனம்: இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம், விமர்சன ரீதியாக இதுவரை எந்த படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு கடுமையான நெகட்டிவ் விமர்சனம் குவிந்து வருகிறது.

படமா இது: இந்நிலையில், சியா கே ராம் என்ற தொடரில் ராமராக நடித்த ஆஷிஷ் ஷர்மா, ஆதிபுருஷ் படம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ராமாயணக் கதையை வைத்து ஆதிபுருஷ் படம் உருவானதை நினைத்து மகிழ்ச்சியில் இருந்தேன். நமது வேதங்களை நம் சினிமா தெரிந்து கொள்ளப்போவதை நினைத்து உற்சாகமாக இருந்தேன்.

ஒரு சோம்பேறியின் முயற்சி: ஆனால், ஆதிபுருஷ் படம் என்னை ஏமாற்றி விட்டது, ராமாயணக் கதையை படமாக எடுக்கும் போது பல ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும்.ஆனால், இந்த படத்தில் எந்த ஆராய்ச்சியும் இல்லை. இது ராமாயணத்தை உருவாக்கும் ஒரு சோம்பேறி முயற்சியாகவே நான் பார்க்கிறேன். இந்த படத்தை பார்க்கும் போது வாட்ஸ்அப் வரும் மெசேஜை ஃபார்வேர்டு செய்தது போல இருக்கிறது.

வெட்கப்படுகிறேன்: இயக்குநர் ஓம் ராவத் இந்துக்களின் உணர்வை பணத்திற்காக புண்படுத்திவிட்டார். ஆதிபுருஷ் படத்தின் தயாரிப்பாளர்கள் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். மேற்கத்திய மயமான இந்தியக் கதையை சொல்லாதீர்கள், இந்த படத்தைப் பார்த்து வெட்கப்படுகிறேன் என்று ஆஷிஷ் ஷர்மா அதிபுருஷ் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X