எஸ் ஜே சூர்யா ஓட இலக்கு எனக்கு ரொம்ப சர்ப்ரைஸா இருந்தது... சிவகார்த்திகேயன்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டான் 100 கோடி மிகப்பெரிய வசூல் சாதனையை செய்து வருகிறது

சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளதால் இப்பொழுது இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் SK20 உருவாகி வருகிறது

இந்நிலையில் டான் படத்தில் எஸ் ஜே சூர்யா உடன் இணைந்து பணியாற்றிய போது அவரது Goal கேட்டு ரொம்பவே சர்ப்ரைஸ் ஆனதாக தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.

டான்

டான்

தமிழ் சினிமாவின் செல்ல பிள்ளையாக உள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஆல் சென்டர்களிலும் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் அறிமுக இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டான் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

100 கோடி வரை வசூல்

100 கோடி வரை வசூல்

பொதுவாக சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் என்றாலே அதில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது கலகலப்பாக ஆரம்பம் முதல் இறுதி வரை செல்லும் அதேபோல முதல் பாதியில் சிவகார்த்திகேயன் செய்யும் லூட்டி பார்க்கும் அனைவரையும் ரசிக்க வைத்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்க சமுத்திரக்கனி மிரட்டி இருந்தார். காதல் காமெடி தந்தை மகனுக்கு இடையே உள்ள சொல்லப்படாத பாச போராட்டம் என அனைத்தையும் கூறியிருந்த டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் டான் கிட்டத்தட்ட 100 கோடி வரை வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சாய்பல்லவி ஜோடியாக

சாய்பல்லவி ஜோடியாக

அடுத்ததாக பிரபல இளம் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். எஸ் கே 20 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 21வது படத்தில் சாய்பல்லவி ஜோடியாக நடிக்கிறார்

மிகச் சிறந்த நடிகராக

மிகச் சிறந்த நடிகராக

இயக்குனராக அறிமுகமாகி இப்பொழுது மிகச் சிறந்த நடிகராக மிரட்டிக் கொண்டிருக்கும் எஸ் ஜே சூர்யா சிவகார்த்திகேயன் உடனே டான் படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார். இந்த நிலையில் டான் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனிடம் தன்னுடைய Goal குறித்து பகிர்ந்துள்ளார்.

எஸ் ஜே சூர்யாவின் Goal

எஸ் ஜே சூர்யாவின் Goal

சினிமாவில் ஒரு ஹீரோவாக ஆகவேண்டும் என்றுதான் எஸ் ஜே சூர்ய வந்தாராம் அதற்காக ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக பல படங்களில் நடித்தாலும் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இயக்குனராக சில படங்களை இயக்கி வெற்றி கொடுத்துவிட்டு அந்த படத்தில் வரும் பணத்தை வைத்து ஒரு படத்தை தயாரித்து அதில் தானே ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதே தன்னுடைய Goal ஆக இருந்தது என எஸ் ஜே சூர்யா சிவகார்த்திகேயன் இடம் கூறியதாக தனியா யூடியூப் சேனல் நேர்காணலில் சிவகார்த்திகேயன் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X