அந்தத் தகுதி எல்லாம் எனக்கு இல்லை.. என்ன எஸ்.ஜே.சூர்யா இப்படி பட்டுனு போட்டு உடைச்சிட்டார்

சென்னை: வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா முன்னணி இயக்குநராக வலம் வந்தார். இப்போது நடிப்பில் படு பிஸியாக இருக்கும் அவர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியிருக்கும் கேம் சேஞ்சர் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லரில் அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது. படமானது ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில் படம் பற்றி அவர் ஓபனாக பேசியிருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜின் கதையில் உருவாகியிருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். ராம்சரண் ஹீரோவாகவும், கீர்த்தி சனோன் ஹீரோயினாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். படமானது ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யா படம் குறித்தும், ஷங்கர் குறித்தும் பல விஷயங்களை ஓபனாக பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

sj suriyah game changer shankar

எஸ்.ஜே.சூர்யா பேச்சு: அவர் பேசுகையில், "கேம் சேஞ்சர் படத்தின் ஷூட்டிங்கில் ஷங்கர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன். எனது நடிப்பு அவருக்கு ரொம்பவே பிடித்து போனதை நினைத்து எனக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி. கேம் சேஞ்சரில் எனது நடிப்பை பார்த்துவிட்டுதான் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு எனக்கு அவர் வாய்ப்பு கொடுத்தார். ஒவ்வொரு கேரக்ட்ரையும் அந்த சீனுக்கு ஏற்றவாறு எப்படி நடிக்க வேண்டும் என்பதை ஷங்கர் ஒவ்வொரு சீனுக்கும் அழகாக நடித்து காட்டுவார். அவர் சொன்னபடி செய்தால் போதும் மேஜிக் நிகழும்.

வித்தியாசமான கோணங்கள்: இந்தப் படத்தை பொறுத்தவரை ராம் சரண் வித்தியாசமான கேரக்டர்களில் வருவார் ஐபிஎஸ் அதிகாரியாக ரொமப்வெ கம்பீரமாக அவர் தெரிவார். பிறகு அப்பண்ணா என்று இன்னொரு கேரக்டரை செய்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் அவரது கரியர் பெஸ்ட்டாக இருக்கும். அவரது வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும்படியான கேரக்டராக அது அமையும். அந்த கதாபாத்திரத்துக்கு ராம் சரண் அவ்வளவு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

கவனம் செலுத்துவேன்: நான் நடிக்கும்போது நடிப்பில் மட்டும்தான் கவனம் செலுத்துவேன். இயக்குநராக யோசிக்கமாட்டேன். அதேபோல் ஷங்கருக்கு ஒரு இயக்குநராக ஆலோசனைகளை வழங்கும் தகுதியெல்லாம் எனக்கு இல்லவே இல்லை. அவர் ரொம்பவே தொலைநோக்கு சிந்தனையும், பார்வையும் உடையவர். ராஜமௌலி போன்ற இயக்குநரே ஷங்கரை பற்றி மிகவும் பெருமையாக பேசுகிறார்கள்.

வார்த்தைகள் வரவில்லை: துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸுக்கு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் என்னை பற்றி பேசும்போது செம மகிழ்ச்சி ஏற்பட்டது. குஷி படத்தின்போது பவன் எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறார். அப்போதே அவருடைய கொள்கைகளை பற்றி சொல்வார்கள். ஆனால் அப்போதெல்லாம் எனக்கு புரியவில்லை. இப்போதுதான் அவரது கொள்கைகள் புரிகின்றன. அவர் எப்போது மக்களுக்காக சிந்திப்பவர். நேர்மையாக உழைப்பவர்களை நேசிப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X