Mark Antony Public Review: பக்கா பைசா வசூல்.. மார்க் ஆண்டனி பொதுமக்கள் விமர்சனம்!
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் மார்க் ஆண்டனி படம் இன்று வெளியாகி உள்ளது.
இதில், எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். அவர்களின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

மார்க் ஆண்டனி: திரிஷா இல்லன்னா நயன்தாரா, ஏ ஏ ஏ, பகீரா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. சென்னை உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட தடைவிதித்தது. இதையடுத்து, கடைசி நேரத்தில் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு படம் இன்று வெளியானது.
டைம் டிராவல்: தன்னுடைய அப்பா தான் அம்மாவை கொன்றான் என்றும் அவன் மிகவும் மோசமானவன் என்றும் ஜாக்கி பாண்டியனை அப்பாவாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் மார்க். இந்த நிலையில் அவன் கையில் டைம் டிராவல் மிஷின் கிடைக்கிறது. அந்த மிஷின் மூலம் தன்னுடைய அப்பா மிகவும் நல்லவர் என்றும் ஜாக்கி பாண்டியன் தான் அவரை கொன்று அவரை பற்றி சமுதாயத்தில் தவறான பிம்பத்தை உருவாக்கி இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொள்கிறான். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் மார்க் ஆண்டனி படத்தின் கதை.
சூப்பரா இருக்கு: மார்க் ஆண்டனி படத்தை பார்க்கும் அனைவரும் நல்லவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். படம் பார்த்த ரசிகர் ஒருவர், படம் உண்மையிலேயே மஜாவா இருக்கு, டிரைலரைப் பார்த்துவிட்டு பெரிய எதிர்பார்ப்புடன் படத்தைப் பார்க்க வந்தேன் படம் உண்மையில் ரொம்ப சூப்பரா இருக்கு.
நோ மைனஸ்: மற்றொரு ரசிகர், படம் மிரட்டலா இருக்கு வழக்கம் போல எஸ்.ஜே. சூர்யா மிரட்டி இருக்கிறார். விஷாலால், எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்புக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. படத்துல எந்த ஒரு மைனசையும் சொல்லமுடியாது, அப்படி லெக்காகும் இடத்தில் எல்லாம், தலைவன் எஸ்.ஜே. சூர்யா வந்து பில் பண்ணிடுறாரு படம் தாறுமாறு தான்.
விஷாலுக்கு கம்பேக்: அதே போல ஜிவி பிரகாஷின் இசை அட்டகாசமாக இருக்கு பஞ்சிமிட்டாய் பாடலை ரீமிக்சை அட்டகாசமாக செய்து இருக்கிறார். மார்க் ஆண்டனி படம் பக்கா பைசா வசூல் செய்துவிட்டது. இந்த படம் விஷாலுக்கு நிச்சயம் கம்பேக் கொடுக்கும் படமாக இருக்கும். ஆதிக் ரவிச்சந்திரன் பஹிரா படத்தில் விட்டத்தை இந்த படத்தில் பிடித்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











