twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எஸ்ஜே சூர்யாவின் 53வது பிறந்தநாள்... ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்

    |

    சென்னை : நடிகர் எஸ்ஜே சூர்யா தனது 53வது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.

    இதையொட்டி ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    இளம் பெண்ணின் அழகான பயணம்... உலா பாடலை வெளியிட்ட அனிருத் இளம் பெண்ணின் அழகான பயணம்... உலா பாடலை வெளியிட்ட அனிருத்

    இயக்குர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவராக உள்ளார் எஸ்ஜே சூர்யா.

    சிறப்பான இயக்குநர்

    சிறப்பான இயக்குநர்

    நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவராக உள்ளவர் எஸ்ஜே சூர்யா. வாலி, குஷி போன்ற படங்களின் மூலம் கோலிவுட்டில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திய அவர், தொடர்ந்து, நியூ, அன்பே ஆரூயிரே போன்ற படங்களின் மூலம் ஹீரோவாகவும் தன்னை வெளிப்படுத்தினார்.

    அஜித்தின் சிறப்பான படம்

    அஜித்தின் சிறப்பான படம்

    முன்னதாக பாக்யராஜ், வசந்த் போன்றவர்களிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ள இவர், அஜித்திடம் வாலி படத்தின் கதையை சொல்லி அவரை இயக்கும் வாய்ப்பை பெறுள்ளார். அந்த படம் எஸ்ஜே சூர்யாவிற்கு மட்டுமின்றி அஜித்தின் சினிமா கேரியரிலும் முக்கியமான படமாக அமைந்தது.

    ரசிகர்கள் வரவேற்பு

    ரசிகர்கள் வரவேற்பு

    தற்போது, மான்ஸ்டர், இறைவி போன்ற படங்களின்மூலம் தன்னை ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் பொருத்தி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது தனது 53வது பிறந்தநாளை அவர் கொண்டாடி வருகிறார்.

    குவியும் வாழ்த்துக்கள்

    குவியும் வாழ்த்துக்கள்

    இதையடுத்து ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். தன்னை செதுக்கி சிறந்த நடிகராக அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர் எஸ்ஜே சூர்யா என்று அவர் பாராட்டியுள்ளார்.

    English summary
    SJ Surya celebrates his 53rd birthday today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X