எஸ்.ஜே சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள் !

சென்னை : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பலராலும் அறியப்பட்ட பல திறமைகளைக் கொண்ட பன்முக கலைஞராக வலம் வருபவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா.

இயக்குனராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி பல முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இவர் தற்பொழுது நடிகராகவும் வலம் வருகிறார்.

நாம் அனைவருக்கும் நடிகராகவும் இயக்குனராகவும் நன்கு பரிச்சயமான எஸ்.ஜே சூர்யா இன்று தனது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்.

தனித்துவமான படங்களின்

தனித்துவமான படங்களின்

தமிழ் சினிமாவில் பல வெற்றி இயக்குனர்கள் இருந்தாலும் எஸ்.ஜே சூர்யா- விற்கு என்ற ஒரு தனி இடம் எப்பொழுதும் இருக்கும். இயக்குனராக அறிமுகமான எஸ். ஜே சூர்யா தனது தனித்துவமான படங்களின் மூலம் மக்கள் மனதில் பல ஆண்டுகளாக வெற்றி பெற்று இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான பாடி லாங்குவேஜ்

வித்தியாசமான பாடி லாங்குவேஜ்

தன்னுடைய வித்தியாசமான பாடி லாங்குவேஜ் மூலம் துறுதுறு இளைஞனாகவும் பல படங்களில் நடித்துள்ள எஸ்.ஜே சூர்யா தற்பொழுது தமிழ் சினிமாவில் மிரட்டும் வில்லன்களில் ஒருவராக இருந்து நம் அனைவரையும் பல ஆண்டுகளாக மிரட்டி வந்த வில்லன்களுக்கு சவால் விடுத்து வருகிறார்.

இரு வேடங்களில் அஜித்

இரு வேடங்களில் அஜித்

இயக்குனர் வசந்த்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஜே சூர்யா ஆசை படத்தில் பணியாற்றிய போது அஜீத்துடன் ஏற்பட்ட நட்பால் வாலி என்ற அற்புதமான படத்தின் கதையை அவரிடம் சொல்ல நேர்ந்தது. இதுவரை அஜித் நடித்த புது விதமான கதாபாத்திரங்களில் மிக முக்கியமானது இந்த படம். அண்ணன் தம்பி என இரு வேடங்களில் அஜித் நடித்து கலக்கி இருந்த வாலி திரைப்படம் எஸ்.ஜே சூர்யாவிற்கு முதல் படமாக அமைந்து மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

தனித்துவமாக படமாக

தனித்துவமாக படமாக

வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் எஸ் ஜே சூர்யா. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து அஜித்திற்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை முதல்முறையாக வாங்கி கொடுத்தது. அஜித் இரு வேடங்களில் நடித்து வெளியான வாலி திரைப்படம் இன்றுவரை ரசிகர்களை கவர்ந்து அஜித்தின் திரைவாழ்க்கையில் ஒரு தனித்துவமான படமாக இருந்து வருகிறது.

குஷி திரைப்படம்

குஷி திரைப்படம்

அஜித்தை வைத்து தனது முதல் படத்தை இயக்கிய எஸ் ஜே சூர்யா அஜித்தின் திரையுலகப் போட்டியாளராக கருதப்பட்டு வந்த விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கியிருந்தார். ஏற்கனவே வாலி திரைப்படம் வெற்றி அடைந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்த நிலையில் குஷி திரைப்படம் மற்றுமொரு மைல்கல்லாக எஸ் ஜே சூர்யாவிற்கு அமைந்தது.

சிறிய ஈகோவையும்

சிறிய ஈகோவையும்

சிவா மற்றும் ஜெனிபர் என இரு கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள ஆழமான காதலையும் அதில் உள்ள சிறிய ஈகோவையும் நேர்த்தியாக கையாண்டு இருந்த குஷி திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பின் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு

தனது திரை வாழ்க்கையை இயக்குனராக தொடங்கிய எஸ்.ஜே சூர்யா "நியூ" திரைப்படத்தை இயக்கி நடித்த தன் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். சயின்டிஃபிக் கதையை மையமாகக்கொண்டு வித்தியாசமாகவும் புதுமையான கதை காலத்திலும் உருவான "நியூ" எஸ்.ஜே சூர்யா விற்கு மற்றுமொரு ஒரு வெற்றி படமாக அமைந்தது. தமிழில் நியூ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா இதே படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து இயக்கி தெலுங்கு திரைத்துறையிலும் வெற்றி இயக்குனராக தனது கொடியை நட்டார்.

சிறந்த நடிகராக

சிறந்த நடிகராக

இயக்குனராகவும் நடிகராகவும் தன்னுடைய வித்தியாசமான கதைகளாலும் வித்தியாசமான நடிப்பாலும் பலரையும் கவர்ந்து வந்த எஸ் ஜே சூர்யா சமீபத்தில் வெளியான மெர்சல் மற்றும் ஸ்பைடர் போன்ற படங்களில் மிரட்டும் வில்லனாகவும் வந்து நம் அனைவரையும் கதிகலங்க செய்தார். மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இறைவி திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகராக பலராலும் பாராட்டப்பட்டு விருதுகளை வாரிக் குவித்தார்.

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

இவ்வாறு படிப்படியாக தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் புதுமையை பல கோணங்களில் அறிமுகப்படுத்தி வரும் எஸ்.ஜே சூர்யா, ஜூலை 20 ஆம் தேதியான இன்று தனது 52வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் வேளையில் இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X