டான் படத்தில் எஸ் ஜே சூர்யாவின் ரோல் என்ன தெரியுமா?

சென்னை : டாக்டர்,அயலான் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இப்பொழுது சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார்.

மிகப்பெரிய திரைப்பட பட்டாளங்கள் உடன் உருவாகி வரும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக எஸ் ஜே சூர்யா வின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்க இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் இப்போது வெளியாகியுள்ளது.

கிளைமாக்ஸ் காட்சியில்

கிளைமாக்ஸ் காட்சியில்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைத்ததோடு குறிப்பாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருப்பதால் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. இதில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு அனைவரையும் மிரள வைத்தது. இயக்குனராக மட்டுமே பலருக்கும் அறிமுகமாகியிருந்த எஸ் ஜே சூர்யா இந்த திரைப்படத்தில் நான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்து இருந்தார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் இவர் பேசும் வசனங்கள் அனைவரிடத்திலும் கைதட்டல்களை பெற்றது.

அரசியல் பின்னணியை

அரசியல் பின்னணியை

அதைத்தொடர்ந்து ஸ்பைடர், மெர்சல் என நெகட்டிவ் கதாபாத்திரங்களின் நடித் து மிரட்டி வரும் எஸ் ஜே சூர்யா வெங்கட் பிரபு சிம்பு கூட்டணியில் அரசியல் பின்னணியை கொண்டு உருவாகி வரும் மாநாடு திரைப்படத்திலும் வில்லனாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

கல்லூரி பின்னணியில்

கல்லூரி பின்னணியில்

வாலி, குஷி என இயக்குனராக வாழ்க்கையை தொடங்கி பின் தான் இயக்கும் திரைப்படங்களில் தானே ஹீரோவாக நடிக்க இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இப்பொழுது சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி உள்ளது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இயக்குனர் அட்லி இடம் உதவி இயக்குனராக புரிந்த சிபி சக்கரவர்த்தி என்பவர் இந்த திரைப்படத்தை இயக்க கல்லூரி பின்னணியில் கோயம்புத்தூரில் உள்ள பிரபல கல்லூரியில் இதன் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ப்ரொஃபஸர் லுக்கில்

ப்ரொஃபஸர் லுக்கில்

படத்தைப் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகாத நிலையில் முதல்முறையாக எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் இவரது பெயர் பூமிநாதன் என அறிவித்த படக்குழு எஸ் ஜே சூர்யா கருப்பு கோட், டை, ஸ்பெக்ஸ் என ப்ரொஃபஸர் லுக்கில் இருக்கிறார். இவர் நடிக்கும் காட்சிகளை இப்பொழுது எடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: don டான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X