பிஸி ஷெட்யூலில் எஸ்ஜே சூர்யா... கில்லர் படத்துக்கு வந்த சிக்கல்... தள்ளிப்போகும் ஷூட்டிங்
சென்னை: வாலி, குஷி, நியூ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள எஸ்ஜே சூர்யா, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
விஜய்யின் வாரிசு படத்தில் எஸ்ஜே சூர்யா நடித்திருந்த கேமியோ ரோல், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் ஆர்சி 15 படத்தில் ராம் சரணுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், கில்லர் திரைப்படம் மூலம் மீண்டும் இயக்குநராக வேண்டும் என்ற எஸ்ஜே சூர்யாவின் கனவுக்கு சிக்கல் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆரம்பமே அமர்க்களம் தான்
1999ல் அஜித், சிம்ரன், ஜோதிகா நடித்த வாலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. ரொமாண்டிக்கல் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியான வாலி அஜித் கேரியரில் ஆல்டைம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் குஷி படத்தை இயக்கி இன்னொரு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். முதல் இரண்டு படங்கள் மூலம் கோலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த எஸ்ஜே சூர்யா, அடுத்து நடிகராகவும் களமிறங்கினார்.

வெரைட்டியான ஹீரோ வில்லன்
குஷிக்கு பின்னர் எஸ்ஜே சூர்யா இயக்கிய நியூ, அ.ஆ படங்களில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். தான் இயக்கிய படங்களில் ஹீரோவாக நடித்த எஸ்ஜே சூர்யா, ஷங்கர் இயக்கிய நண்பன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படங்களில் எமோஷனலாக நடித்து ஸ்கோர் செய்திருந்தார். இதனையடுத்து ஹீரோ, வில்லன், காமெடி என எல்லா ஜானர்களிலும் வெரைட்டி காட்டி வருகிறார். விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான வாரிசு படத்தில் கேமியோ ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.

எஸ்ஜே சூர்யாவின் ட்ரீம் ப்ராஜக்ட்
தற்போது ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 படத்தில் ராம் சரணுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநராக வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம். எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் கடைசியாக இசை திரைப்படம் 2015ம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்நிலையில், தற்போது அவர் இயக்கும் புதிய படத்திற்கு கில்லர் என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான கதை, திரைக்கதை வேலைகளை எஸ்ஜே சூர்யா முடித்துவிட்டதோடு, BMW கார் ஒன்றையும் வாங்கியுள்ளார்.

தள்ளிப்போகும் ஷூட்டிங்
கில்லர் திரைப்படம் கார் ரேஸை பின்னணியாக வைத்து உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்காக ஜெர்மனியில் இருந்து இருவர் மட்டுமே பயணிக்க கூடிய BMW Z4 M40i ரெட் கலர் காரை எஸ்ஜே சூர்யா வாங்கியிருந்தார். இதனால் கில்லர் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆர்சி 15 பட ஷூட்டிங் இன்னும் முடியாததால் கில்லர் படப்பிடிப்பும் தள்ளிப்போவதாகக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு
அதன்படி கில்லர் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கில்லர் படத்திற்காக வாங்கிய காரில் தான் அடிக்கடி ரவுண்ட் அடித்து வருகிறார் எஸ்ஜே சூர்யா. இந்த காரை வாங்கும் போது பிரியா பவானி சங்கரும் எஸ்ஜே சூர்யாவுடன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கோடி மதிப்புடைய BMW Z4 M40i காரை, கில்லர் படத்திற்காக எஸ்ஜே சூர்யா சொந்தமாகவே வாங்கியுள்ளதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே தாறுமாறாக எகிறிப்போய் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











