நம்புங்க.. நான் ரொம்ப நல்ல பையன் ஆகிட்டேன்.. யாரு நம்ம ’நியூ’ எஸ்.ஜே. சூர்யாவா இப்படி! ஏன்?

சென்னை: நியூ திரைப்படம் ரிலீசாகி 17 ஆண்டுகள் கடந்து விட்டன. இதனை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் நியூ படத்தில் இடம்பெற்ற அந்த ஹாட்டான பாடலை யூடியூபில் வெளியிட வைத்த கோரிக்கைக்குத் தான் இப்படியொரு ட்வீட்டை எஸ்.ஜே. சூர்யா போட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

வாலி, குஷி படங்களுக்கு பிறகு எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அவரே ஹீரோவான திரைப்படம் தான் நியூ.

சிம்ரன், கிரண், மணிவண்ணன் என பிரபலங்கள் நடித்த இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

ஹாலிவுட் ஸ்டைல் கதை

ஹாலிவுட் ஸ்டைல் கதை

17 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் ஹாலிவுட் ஸ்டைல் கதையை படமாக்கி இருந்தார் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா. ஆமாம் ஹாலிவுட்டில் வருவது போல அதிக ஆபாசங்களும் படம் முழுக்க நிறைந்திருந்தது. சில முன்னணி ஹீரோக்கள் நடிக்க மறுத்ததால் எஸ்.ஜே. சூர்யாவே ஹீரோவாகி விட்டார்.

17 வருஷம் ஆகிடுச்சு

17 வருஷம் ஆகிடுச்சு

நியூ திரைப்படம் 2004ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி வெளியானது. 17 ஆண்டுகளை அந்த படம் கடந்த நிலையில் எஸ்.ஜே. சூர்யா ரசிகர்கள் #17YearsofNew என்கிற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர். ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவிக்கவே சில சூப்பரான கோரிக்கைகளை ரசிகர்கள் வைத்தனர்.

அந்த பாட்டை வெளியிடுங்க

அந்த பாட்டை வெளியிடுங்க

நியூ படத்தில் படு கிளாமரான ரோலில் நடிகை கிரண் நடித்திருப்பார். அந்த படத்தில் இடம்பெற்ற மார்க்கண்டேயா பாடலை இப்போதாவது யூடியூபில் பதிவிடுங்கள். எந்த டிவி சேனல்களிலும் அந்த பாட்டை ஒளிபரப்புவதே இல்லை என ரசிகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு அந்த பாட்டு ரொம்ப ஹாட்டாக இருக்கும் இப்போ அப்லோடு பண்ண முடியாது என எஸ்.ஜே. சூர்யா பதிலளித்துள்ளார்.

எஸ்.ஜே. கட்

எஸ்.ஜே. கட்

ஹாலிவுட் இயக்குநர் ஜாக் ஸ்னைடரின் கட்டை மறந்து விடுங்க.. நம்ம எஸ்.ஜே. சூர்யா கட் தான் இப்போ வேணும் என ரசிகர்கள் நியூ பாடல் குறித்த கோரிக்கையை அடுக்க அதற்கு எஸ்.ஜே. சூர்யா கொடுத்த பதில் தான் வேற லெவல் அலப்பறை.

நல்ல பையன்

நல்ல பையன்

அதற்கு பதிலளித்த நடிகர் எஸ்.ஜே. சூர்யா அந்த எஸ்.ஜே. இப்போ ரொம்ப நல்ல பையன் ஆகிட்டான் என ட்வீட் போட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். மான்ஸ்டர் படத்தில் சூர்யாவை பார்த்த ரசிகர்கள் நம்ம நியூ சூர்யாவா இது என பார்த்தது போலவே ஆளே இப்போ டோட்டலா மாறிட்டாரு.. மாநாடு படத்தில் எப்படி வெடிக்கப் போறாருன்னு வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X