கொலைகாரன் பட இயக்குநருடன் கைகோர்க்கும் எஸ்ஜே சூர்யா... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

SJ Surya join hands with Kolaikaran director for Web series

சென்னை : நடிகர் எஸ்ஜே சூர்யா அடுத்தடுத்த படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

அடுத்ததாக கொலைகாரன் படத்தை இயக்கிய ஆன்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இந்த சீரிசை விக்ரம் -வேதா டைரக்டர்கள் புஷ்கர் -காயத்ரி தயாரிக்கவுள்ள நிலையில் அடுத்த வாரத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

நடிப்பில் கவனம்

நடிப்பில் கவனம்

நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்ஜே சூர்யா விஜய், அஜித் உள்ளிட்டவர்களை வைத்து சிறப்பான படங்களை கொடுத்தவர். ஒரு கட்டத்தில் தானே ஹீரோவாகவும் நடித்து படங்களை இயக்கினார். இந்நிலையில் தற்போது இவர் டைரக்ஷனை ஒதுக்கி வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறைவி, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்தன. அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

வெப் சீரிசில் எஸ்ஜே சூர்யா

வெப் சீரிசில் எஸ்ஜே சூர்யா

இந்நிலையில் இயக்குநர் ஆன்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா வெப் சீரிசில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் விஜய் ஆன்டனி நடித்த கொலைகாரன் படத்தை இயக்கியுள்ளார். அமேசான் பிரைம் ஓடிடிக்காக இந்த வெப் தொடர் தயாராக உள்ளது. இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் துவங்கவுள்ளது.

புஷ்கர் -காயத்ரி தயாரிப்பு

புஷ்கர் -காயத்ரி தயாரிப்பு

இந்த தொடரை விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் -காயத்ரி தயாரிக்க உள்ளனர். கடந்த 2017ல் வெளியான விக்ரம் வேதா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிறப்பான வெற்றி பெற்ற படம். இந்த படம் தற்போது பாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் தயாரிப்பிலும் இறங்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X