விறுவிறுப்பான சூட்டிங்கில் வாரிசு படம்.. எஸ்ஜே சூர்யாவுக்கு என்ன கேரக்டர் தெரியுமா?

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசுப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ளனர். பிரபு, சரத்குமார், ஷாம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா கேமியோ ரோலில் நடித்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் வாரிசு படம்

விஜய்யின் வாரிசு படம்

நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தன்னுடைய தளபதி 66 படத்திற்காக வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்துள்ளார். மேலும் படத்தில் பிரபு, சரத்குமார், ஜெயசுதா, குஷ்பூ, ராதிகா சரத்குமார், ஷாம் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர்.

சென்னை, ஐதராபாத்தில் சூட்டிங்

சென்னை, ஐதராபாத்தில் சூட்டிங்

இந்தப் படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்ட நிலையில், சில தினங்கள் சூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஐதராபாத்தில் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், பெப்சி தொழிலாளர்களின் நலனுக்காக மீண்டும் சென்னையில் சூட்டிங்கை மாற்றினார் விஜய். தொடர்ந்து தற்போது ஐதராபாத்தில் இறுதிக்கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பாக நடைபெறும் சூட்டிங்

பாதுகாப்பாக நடைபெறும் சூட்டிங்

இந்தப் படத்தின் டைட்டில் கடந்த மாதம் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியானது. தொடர்ந்து படத்தின் 3 போஸ்டர்களும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து படத்தின் சில சூட்டிங் ஸ்பாட் காட்சிகளும் இணையத்தில் லீக்கானது. இதனால் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் கடுப்பாகினர். இதையடுத்து மிகவும் பாதுகாப்பாக படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

குடும்ப சென்டிமெண்ட் படம்

குடும்ப சென்டிமெண்ட் படம்

தொடர்ந்து மாஸ் படங்களில் நடித்துவரும் விஜய், நீண்ட நாட்களுக்கு பிறகுகுடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இதில் அவர் இரண்டு வேடங்களில் நடித்துவருவதாகவும் படத்தில் விஜய் படங்களுக்கான காமெடி, ஆக்ஷன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் நிறைந்து இருக்கும் என்றும் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சூட்டிங் அப்டேட்

சூட்டிங் அப்டேட்

இந்தப் படத்தை விரைவில் முடித்து பொங்கல் ரிலீசாக வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுவரும் இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் மகளிர் கல்லூரி ஒன்றில் நடத்தப்பட்டுள்ளது.

கேமியோ ரோலில் எஸ்ஜே சூர்யா

கேமியோ ரோலில் எஸ்ஜே சூர்யா

படத்தில் கேமியோ ரோலில் எஸ்ஜே சூர்யா மிரட்டலான நடிப்பை கொடுக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்காக அவர் இரண்டு நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இதனிடையே இந்த மகளிர் கல்லூரி சூட்டிங்கிலும் அவர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமியோ கேரக்டர்கள்

கேமியோ கேரக்டர்கள்

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா, ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். இவரது கேரக்டர் மற்ற கேரக்டர்களை ஓரங்கட்டி பாராட்டுக்களை பெற்றது. இதையடுத்து கோலிவுட்டில் மற்ற நடிகர்களும் கேமியோ ரோல் என்றாலும் அழுத்தமான கேரக்டர் என்றால் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் தற்போது எஸ்ஜே சூர்யாவுடன் வாரிசு படத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X