புலி ஆவதற்காக எலியுடன் நடித்த எஸ்.ஜே. சூர்யா…!

சென்னை: மான்ஸ்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகராக பல புதிய முயற்சிகளை எடுத்து வரும் எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படமான மான்ஸ்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

SJ Surya Monster movie first look!

அட்டகத்தி தினேஷ் , நிவேதா பெத்துராஜ் நடித்த ஒருநாள் கூத்து திரைப்படத்திற்குப் பிறகு நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் மான்ஸ்டர். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

ஸ்டூவர்ட் லிட்டில் படத்தில் வருவது போல இப்படத்தில் ஒரு எலியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள எஸ்.ஜே.சூர்யா, பல புலிகளோட நடிச்ச என்ன ஒரு எலியோட நடிக்க வச்சிருக்காங்க. ஆனா உங்களுக்குத் தெரியுமா? இந்த எலிதான் எதிர்காலத்தில் என்னை ஒரு 'புலி'யா ஆக்கப் போகுது என பதிவிட்டுள்ளார்.

குழந்தைகளுக்குப் பிடித்த ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா இருப்பார் என இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தின் கதை முழுவதும் பிரியா பவானி சங்கரை சுற்றியே இருக்குமாம். ஆனால் அவர் கதைக்கு வெளியே இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

ஒருநாள் கூத்து திரைப்படத்தில் அடுத்தடுத்து திருப்பங்களை வைத்து படத்தை ரசிக்க வைத்தார் நெல்சன். இப்படத்தில் எஸ்ஜே.சூர்யா நடித்திருப்பது மிகப்பெரிய பலமாக உள்ளது. அதனால் நிச்சயம் சுவாராஸ்யமான படமாக இருக்கும் என நம்பலாம்.

விரைவில் திரைக்கு வர உள்ள இப்படத்திற்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாயா, மாநகரம் படங்களைத் தயாரித்த பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X