”மான்ஸ்டர்” இது வெப்சைட் இல்ல... எஸ். ஜே. சூர்யா பிரியா பவானி சங்கர் நடிக்கும் படம்

சென்னை: எஸ். ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்திற்கு மான்ஸ்டர் என பெயரிட்டுள்ளனர்.

நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமாவுக்கு வந்தார் எஸ்.ஜே.சூர்யா. இயக்குனராக வெற்றிபெற்று தற்போது முழுநேர நடிகராகிவிட்டார்.

SJ Surya movie titled as Monster

அடுத்ததாக சர்கார், இறவாக்காலம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அமிதாபச்சனுடன் உயர்ந்த மனிதன் படத்திலும் நடிக்கிறார்.

இந்த நிலையில், எஸ். ஜே. சூர்யா பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மான்ஸ்டர் எனப் பெயரிட்டுள்ளனர்.

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். தற்போது மான்ஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டைட்டில் அனிமேஷன் வீடியோவை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ளார்.

இது ஒரு குடும்ப பொழுதுபோக்குச் சித்திரம் என்று சொன்னால் அது க்ளிஷேவாக இருக்கும். இது குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருந்தாலும், நாங்கள் வேறு வகையில் எடுத்திருக்கிறோம். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உண்டு. எஸ். ஜே.சூர்யா இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரியா பவானி சங்கர் எஸ். ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பிரியாவுக்கும் கதைக்கும் தொடர்பிருக்காது. ஆனால் கதை அவரைச் சுற்றியே நடக்கும் என இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார். மேலும் மான்ஸ்டர் என்ற பெயருக்கான அர்த்தத்தை நீங்கள் படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என அவர் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

படத்தின் 60 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டதாம். விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவும், விஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X