ப்ரியா பவானிசங்கரின் அழகைப் பாராட்டித் தள்ளிய எஸ்.ஜே.சூர்யா!
நடிகை ப்ரியா பவானிசங்கர் அழகை பற்றி நடிகர் எஸ்.ஜே. சூர்யா புகழ்ந்து பேசினார்.
Recommended Video
சென்னை: மான்ஸ்டர் படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ப்ரியா பவானிசங்கர் அழகை பற்றி நடிகர் எஸ்.ஜே. சூர்யா புகழ்ந்து பேசியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானிசங்கர், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மான்ஸ்டர். 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தின் இயக்குனர்.
பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள மான்ஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, நடிகை ப்ரியா பவானி சங்கரின் அழகை புகழ்ந்து தள்ளினார்.

உண்மையான ஹீரோ:
இதுகுறித்து அவர் பேசியதாவது, " இந்த படத்தின் உண்மையான ஹீரோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தான். சினிமா மீது அவர்கள் வைத்திருக்கும் மரியாதை பாராட்டத்தக்கது.

புலிகளுக்கு வில்லன்:
இந்த படத்தின் கதையை நெல்சன் என்னிடம் சொல்ல வந்தபோது, நீங்களும் ஒரு எலியும் என ஆரம்பித்தார். பல புலிகளுக்கு வில்லான நடிச்சாச்சு, இப்போ போய் எலியோட மோத சொல்றீங்களேன்னு கேட்டேன்.

ஒரிஜினல் எலி:
ஆனால் படத்தின் கதை மிக சுவாரஸ்யமாக இருக்கும். எலி ஒரிஜினலாக தெரிய வேண்டும் என்பதற்காக, கிராபிக்ஸ் எதுவும் செய்யாமல், நிஜ எலியை வைத்தே படப்பிடிப்பு நடத்தினார் இயக்குனர் நெல்சன். அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய இயக்குனர் அவர்.

அழகு:
படப்பிடிப்பில் பார்த்ததைவிட திரையில் மிகவும் அழகாக தெரிகிறார் ப்ரியா பவானிசங்கர். இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். வித்யா பாலன் போல பிரபலமாவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

மேஜிக்கல் மூவி:
மான்ஸ்டர் ஒரு சாதாரண படம் தான். இது பெரிய பிரளயத்தை எல்லாம் ஏற்படுத்தாது. ஆனால் இந்த படம் ஒரு மேஜிக்கல் மூவி. நிச்சயம் உங்களை பரவசப்படுத்தும்", என எஸ்.ஜே.சூர்யா கூறினார்.


Click it and Unblock the Notifications











