ஏசியை தூசி தட்டும் எஸ்ஜெ சூர்யா!
இசை படத்தை வெளியிட்ட சூட்டோடு தனது அடுத்த படமான ஏசியை கையிலெடுக்கப் போகிறாராம் எஸ்ஜெ சூர்யா.
எஸ் ஜெ சூர்யாவே எழுதி இயக்கி நடித்துள்ள படம் இசை. படத்துக்கு இசையும் அவர்தான். சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப் படம் இளையராஜா - ரஹ்மான் திரைவாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இசை படத்துக்காக தான் போட்ட பாடல்களை திரையுலக நண்பர்களுக்குப் போட்டுக் காட்டி 'மெரசலாக்கி' வருகிறாராம் எஸ்ஜெ சூர்யா.
ஏற்கெனவே சிம்பு, அசின் நடிப்பில் 'ஏ.சி' என்ற படத்தை இயக்கத் தொடங்கி, திடீரென கைவிட்டார் எஸ்ஜெ சூர்யா. இப்போது அந்த ஏ.சி.யை மீண்டும் தூசு தட்டுகிறார்.
படத்துக்குப் பெயர் அதேதான். ஏசிக்கு கீழே ஏழுமலை சித்ரா என துணைத் தலைப்பு வருமாம். இந்தப் படத்தில் எஸ்.ஜெ.சூர்யாதான் நாயகன்... நாயகி தமன்னா!
Comments


Click it and Unblock the Notifications