இதுக்கு மேல முடியாது சாமி.. இந்தியன் 2வுக்காக ரசிகர்களிடம் அப்படியொரு கோரிக்கை வைத்த எஸ்.ஜே. சூர்யா!

சென்னை: இந்தியன் 2 படத்தின் புரமோஷனுக்காக எஸ்.ஜே. சூர்யாவை உடன் அழைத்துக் கொண்டு மலேசியா சென்றிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா என ஹீரோயின்களை கழட்டி விட்டுவிட்டு பாய்ஸ் டீம் இந்தியன் 2 புரமோஷனில் பிசியாகி இருக்கிறது. வரும் ஜூலை 12ம் தேதி உலகம் முழுவதும் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார், சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி என ஏகப்பட்ட திறமையான நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருந்தாலும் இன்னமும் பான் இந்தியா வெற்றியை கொடுக்க முடியவில்லை.

Indian 2 SJ Surya Kamal Haasan 2

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் அதிகபட்சமாக 800 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இன்னமும் தமிழ் சினிமாவில் ஒரு படம் கூட 1000 கோடி வசூலை ஈட்ட முடியவில்லை.

1000 கோடி வசூல்: பாலிவுட், டோலிவுட் மற்றும் சாண்டல்வுட் என தமிழ் சினிமா மற்றும் மலையாள சினிமாவை தவிர்த்து மற்ற பெரிய சினிமா இண்டஸ்ட்ரிகள் எல்லாமே 1000 கோடி வசூலை பாக்ஸ் ஆபிஸில் சாத்தியமாக்கியுள்ளன. ராஜ்மெளலி டோலிவுட் படங்களை 1000 கோடிக்கு அதிகமான வசூலை குவிக்கும் படங்களை கொடுத்த நிலையில், கன்னடத்தில் பிரசாந்த் நீல் கேஜிஎஃப் 2 மூலம் அதை சாதித்துக் காட்டியுள்ளார். பாலிவுட்டில் அமீர்கான் மற்றும் ஷாருக்கான் படங்கள் 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியுள்ளன.

மிஸ் பண்ண ரஜினி, விஜய்: மற்ற மாநிலங்களில் ஒரு படம் ஓடினால் ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியும் அந்த படத்துக்கு உறுதுணையாக இருந்து அந்த படத்தை பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்க வைத்து விடுகின்றன. ஆனால், தமிழ் நண்டு கதை போல ரஜினிகாந்த் படம் ஓடினால் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்வதும், விஜய் படம் ஓடினால் ரஜினி ரசிகர்கள் ட்ரோல் செய்வதும் என கடந்த ஆண்டு ஜெயிலர் மற்றும் லியோ என இரு படங்களை அந்த ரெக்கார்டை செய்ய விடாமல் செய்து விட்டதாக குற்றச்சாட்டுகள் சோஷியல் மீடியாவில் கிளம்பின.

Indian 2 SJ Surya Kamal Haasan 2

எஸ்.ஜே. சூர்யா கோரிக்கை: ஷங்கர் இயக்கத்தில் 6 ஆண்டுகள் கழித்து 2.0 படத்திற்கு பிறகு இந்தியன் 2 படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் ஒற்றுமையுடன் இருந்து 1000 கோடி ரூபாய் வசூல் படமாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை இந்தியன் 2 படத்துக்காக புரமோஷன் செய்த போது வைத்திருக்கிறார்.

இந்தியன் 3ல் சூப்பர் சீன்: இந்தியன் 2வில் சில காட்சிகள் மட்டுமே வருகிறேன் என்றும் இந்தியன் 3ல் எனக்கும் கமல் சாருக்கும் ஒரு சூப்பர் காம்பினேஷன் சீன் இருக்கு. என்ன இங்க வாடான்னு கூப்பிடணும், அவ்ளோதான் சீன்.. அந்த சீனை விரலில் சொடக்குப் போட்டு எப்படி கூப்பிடுகிறார் என பார்க்க இந்தியன் 3 வரை காத்திருங்க என எஸ்.ஜே. சூர்யா பேசியுள்ளார். இந்திய 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறுமா? என்பது அந்த படம் வெளியானால் தான் தெரியும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X