எஸ்ஜே சூர்யாவின் பொம்மை படத்தின் க்யூட் பாடல் முதல் முத்தம் வெளியானது!
சென்னை : நடிகர் எஸ்ஜே சூர்யா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
இயக்குநராக துவங்கிய அவரது பயணம் தற்போது நடிகராக மாறியுள்ளது. ஹீரோ, வில்லன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என அவரது வித்தியாசமான நடிப்பை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா ஹீரோவாக நடிக்கும் பொம்மை படத்தின் மெலடி பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் எஸ்ஜே சூர்யா
இயக்குநராக கோலிவுட்டில் அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. இவரது குஷி, வாலி போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், ஒரு கட்டத்தில் தானே தன்னுடைய படங்களில் ஹீரோவாக களமிறங்கி நடிக்கத் துவங்கினார். அந்தப் படங்களிலும் சிறப்பான திரைக்கதை மூலம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தார்.

சிறப்பான படங்கள்
தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் படங்களிலும் ஹீரோவாக, கேரக்டர் மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவரது மான்ஸ்டர், இறைவி போன்ற படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்டவர்களுடன் டான், வாரிசு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

பொம்மை படத்தில் எஸ்ஜே சூர்யா
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எஸ்ஜே சூர்யா நடித்திருந்தார். இந்தப படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதனிடையே அடுத்ததாக எஸ்ஜே சூர்யா நடிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படம் உருவாகியுள்ளது.

முதல் பாடல்.. முதல் முத்தம்
சைக்கோ த்ரில்லராக பொம்மை படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் முதல் பாடல், முதல் முத்தம் தற்போது வெளியாகி இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இரண்டாவது முறையாக ஜோடி
முன்னதாக மான்ஸ்டர் படத்தில் எஸ்ஜே சூர்யா -பிரியா பவானி சங்கர் ஜோடி இணைந்து நடித்துள்ள நிலையில், தற்போது பொம்மை படத்தில் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளது. மான்ஸ்டர் படத்தில் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி சிறப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளது.

ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட பாடல்
தற்போது வெளியாகியுள்ள முதல் முத்தம் பாடலை பாடலாசிரியர் கார்கி எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா மற்றும் ஸ்வேதா மோகன் இந்தப் பாடலை இணைந்து பாடியுள்ளனர். பாடலை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். யுவனின் இசையில் மனதிற்கு இதமான உணர்வை இந்தப் பாடல் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











