Indian 3: கமலோட அப்பன் நான்.. இந்தியன் 3 சீக்ரெட்டை சொன்ன எஸ்.ஜே.சூர்யா!

சென்னை: இந்தியன் 2 திரைப்படம் பல ஆண்டு எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூலை 12ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலரில் கமல் பலவிதமான கெட்டப்பில் அசத்தி உள்ளார். பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், எஸ்.ஜே.சூர்யா இந்தியன் 3 படத்தின் சீக்ரெட்டான விஷயத்தை கூறியுள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால் , பிரியா பவானி ஷங்கர் , ரகுல் ப்ரீத், சித்தார்த் , பாபி சிம்ஹா, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தியன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில், இந்தியன் இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன. மூன்றாவது பாடலான காலெண்டர் பாடல் நாளை வெளியாக உள்ளது.

Indian 2 kamal SJ surya 2

இளையராஜா,ஏ.ஆர். ரசிகன்: மேலும், இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கமல். தான் எப்போதுமே இளையராஜா மற்றும் ஏஆர் ரஹ்மானின் ரசிகன் என்று தெரிவித்துள்ளார். கடந்த 40 ஆண்டு காலமாக இளையராஜா இசையை தான் கேட்டு வருவதாகவும் இதே போல கடந்த 30 ஆண்டுகளாக ஏஆர் ரஹ்மான் இசையையும் தான் கேட்டு வருவதாக கமல் தெரிவித்திருந்தார்.

7 வில்லன்கள்: இந்தியன் 2 படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது. இப்படத்தில், கமல் பலவிதமான கெட்டப்போட்டு அசத்தி உள்ளார். மேலும் இப்படத்தில் கமலுக்கு மொத்தம் ஏழு வெவ்வேறு வில்லன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒவ்வொரு வில்லனையும் ஒவ்வொரு கெட் அப் இல் சேனாபதி பழிவாங்கும் காட்சிகள் இப்படத்தில் ரசிகர்களை கவரும் அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதில் கமல் மற்றும் எஸ்.ஜே சூர்யாவுக்கு இடையிலான காட்சிகளை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

இந்தியன் 3 சீக்ரெட்: இந்தியன் 2 படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ளதால், படத்திற்கான ப்ரோமோஷன்களை படக்குழு விறுவிறுப்பாக செய்து வருகிறது. ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஜே சூர்யா இந்தியன் 2 படத்தில் நான் குறைவான காட்சிகளிலேயே நடித்திருக்கிறேன். ஆனால், நான் வரும் காட்சிகள் அனைத்தும் ரொம்ப நல்லா இருக்கும். ஆனால் 3 ஆம் பாகத்தில் எனக்கும் கமலுக்கு இடையில் ஒரு ஹைலைட்டான காட்சி உள்ளது. அதாவது நான் சேனாதிபதியின் அப்பாவாக நடித்திருக்கிறேன். படத்தை பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ரசிகர்கள் இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி வசூல் படமாக மாற்றுவீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.

பாட்டுக்கு ரூ.30 கோடி: இந்தியன் படத்தின் இரண்டாம் மற்றும் 3 ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பை ஷங்கர் இயக்கி முடித்துள்ளார். இரண்டாம் பாகம் வெளியான அடுத்த சில மாதங்களில் 3 ஆம் பாகத்திற்கான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படம் ரூ. 250 கோடி பட்ஜட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் ரூ. 30 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகி அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X