தங்கமான மனிதரா இவரு... வீர தீர சூரன்ல என்ன ஸ்பெஷல்?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்!
சென்னை: வீர தீர சூரன் படத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து வில்லனாக எஸ்.ஜே.சூர்யா மிரட்டியுள்ளார். படத்தின் டிரெய்லரை பார்க்கும்போதே தரமாந ஆக்சன் சம்பவமாக இருக்கிறது. தங்கலான் படத்திற்கு பிறகு விக்ரமிற்கு கம்பேக் என்றே கூறலாம். ஒரு இரவில் நடக்கும் கதை என படக்குழுவினரே தெரிவித்துள்ளனர்,. இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து எஸ்.ஜே.சூர்யா என்ன சொல்லியிருககார்னு பார்ப்போம் வாங்க.
அருமையான படம்: வீர தீர சூரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, ஜிவி.பிரகாஷ் சார் சொன்னது மாதிரி அசுரன், பிதாமகன், சேது படங்களுக்கும் பயங்கரமான ரெஸ்பான்ஸ் இருக்கும். ஜாலியா சிரிக்க வைக்கிற படமாதிரி இருக்காது. இந்தப் படம் டிபிக்கல் தான், ஆனால், ஒரு அருமையான படத்தில் நடித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சியை தருகிறது. இது முழுக்க முழுக்க அருண்குமார் சாரோட ஒரு படம். ஒரு ஆங்கில தரத்தில் ஒரு படமாக இருக்கும் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

தரமான சம்பவம்: ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆன பின்பு நான் எப்போதும் இயக்குநர்களிடம் என்னை ஒப்படைத்துவிடுவேன். இயக்குநர் அருண்குமார் என்னை வித்தியாசமான ஆளாக காட்டி இருக்கிறார் என எஸ்.ஜே.சுர்யா தெரிவித்தார். அதன் பிறகு வழக்கமான பாணியில் கலகலப்பை ஏற்படுத்தும் வகையில்,
கதையின் நாயகன், எதிர் நாயகன். ஆனால் நாயகன் அது லைஃப்ல மிஸ் ஆகக்கூடாது என பேசி கலகலப்பை ஏற்படுத்தினார்.இந்தப் படம் வித்தியாசமான அனுபவத்துடன் தரமான சம்பவம் செய்ய காத்திருக்கிறது. ஒரு இயக்குநருக்கு என்ன தேவையோ அதை பண்ணி கொடுக்கக் கூடிய சிறந்த புரொடியூசர் சிபு சார் அவர் சொன்னதை செய்து முடித்திடுவார் என எஸ்.ஜே.சூர்யா பேசினார்.
வெற்றி வாகை: படத்தின் டப்பிங் பணியின் போது விக்ரம் சார் என்னை பார்த்து மிரண்டு போயி பாராட்டினார். என்னங்க சார் இப்படி பன்றீங்க என கேட்டது என்னால் மறக்கவே முடியாது. கண்டிப்பா வீர தீ சூரன் திரைப்படம் வெற்றி வாகை சூடும் என தெரிவித்தார். பின்னர், படத்திற்காக எல்லாரும் உழைப்பார்கள். இந்த படத்தில் இயக்குநருக்கு என்ன வேண்டும் என்பதை உணர்ந்து தீவிரமா உழைச்சிருக்காங்க. இந்த படத்தில் ரொம்ப என்ஜாய் பண்ணி வேலை பார்த்திருக்கேன். சுராஜ் சாரை பத்தி சொல்லனும். அவர் தமிழ் கற்றுக்கொண்டு ஆர்வத்தோடு நடித்தது பிரம்மிக்க வைக்கிறது. அவரோட பாசிட்டிவ் தான் பூஸ்ட் அப் மாதிரி இருக்குது என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்தார்.

எல்லோரை பற்றியும் பேசிய எஸ்.ஜே.சூர்யா கடைசியாக படத்தின் நாயகன் விக்ரமை பற்றி சிறு வரிகளில் முடிப்பார் என்று பார்த்தால் பேச்சிலேயே கரைய வைத்து விட்டார். நடிப்பு என்பது ஒரு விஷயம். ஸ்டார் என்பது ஒரு விஷயம். ஆக்டிங்கையும், ஸ்டார்டமையும் லிங்க் போட்டு இழுத்து கையில வச்சிருக்குற மிகச்சிறந்த நபர்தான் விக்ரம். தெய்வமகள், அந்நியன், ஐ என வெரைட்டி காட்டி வரும் அவருக்கு இந்த படம் ஒரு வித்தியாச அனுபவத்தை தரும். கண்டிப்பா ரசிகர்களுக்கு பிடித்த படமா இருக்கும் என்பதை உறுதியாக சொல்கிறேன். துஷாரா விஜயனை பற்றி சொல்லும் போது இந்த பொண்ணு நடிப்பு அரக்கி என்றும் எஸ்.ஜே.சூர்யா கூறினார்.


Click it and Unblock the Notifications











