ரஜினியின் நிம்மதியை கெடுக்கும் எஸ்.ஜே. சூர்யா?

By Siva

சென்னை: ரஜினிகாந்த் படத்தில் வில்லனாக நடிக்குமாறு எஸ்.ஜே. சூர்யாவை கேட்டுள்ளாராம் ஏ.ஆர். முருகதாஸ்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் 10ம் தேதி பூஜையுடன் துவங்குகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்குமாறு இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

SJ Surya to act in Rajinikanths movie?

எஸ்.ஜே. சூர்யா தற்போது உயர்ந்த மனிதன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அமிதாப் பச்சன் கோலிவுட்டில் அறிமுகமாகும் அந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.

வில்லத்தனம் செய்வதில் எஸ்.ஜே. சூர்யா வல்லவர், அம்சமாக நடிப்பார். அதனால் அவர் ரஜினிக்கு வில்லன் ஆக நடித்தால் நன்றாக இருக்கும். ரஜினியுடன் மோத எஸ்.ஜே. சூர்யா சம்மதம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே அடிக்கடி அப்டேட் கிடைப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

முன்னதாக கடந்த 4ம் தேதி சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடந்த போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்ட ரஜினியின் புகைப்படங்கள் எப்படியோ கசிந்து சமூக வலைதளங்களில் வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X