மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் இணையும் சூர்யா!
சென்னை : இயக்குநராக வெற்றிப் படங்களை இயக்கி, பிறகு பல படங்களில் நடித்தும் ஹீரோவாக க்ளிக் ஆகாமல் இருந்தார் எஸ்.ஜே.சூர்யா.
அவர் நடித்த படங்களில் அவரது நடிப்புத்திறமை வெளிப்பட்டிருந்தாலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த 'இறைவி' படத்தில்தான் எஸ்.ஜே.சூர்யாவுக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது.
விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்த 'இறைவி' படம் தோல்வியடைந்தாலும், ஒரு நடிகராக அந்தப் படம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பெரிய 'பிரேக்'காக அமைந்தது.

மெர்சல் வில்லன்
'இறைவி' படத்தைத் தொடர்ந்து 'ஸ்பைடர்', 'மெர்சல்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர், விரைவில் வெளியாக உள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை', 'இறவாக்காலம்' ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். 'ஸ்பைடர்' படத்தில் இவரது நடிப்பு சிறப்பாகப் பேசப்பட்டது.

கார்த்திக் சுப்புராஜ் படம்
பல படங்களில் நடித்துக்கொண்டு தற்போது பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் ஒரு படத்தில் இணைகிறார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை வேறு ஒருவர் இயக்குகிறார்.

பாபி சிம்ஹா நடிக்கவில்லை
இந்தப்படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தனக்கு சினிமாவில் லைஃப் கொடுத்தவர் என்பதை மறந்து கார்த்திக் சுப்புராஜிடம் அதிக சம்பளம் கேட்டாராம் பாபிசிம்ஹா.

வேறொரு நடிகர்
அதனால், இப்போது அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க 'டிமான்டி காலனி' படத்தில் நடித்த சனந்த் என்பவரை புக் செய்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பிரபுதேவா நடிக்கும் 'மெர்குரி' படத்திலும் சனந்த் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் மீண்டும் எஸ்.ஜே.சூர்யா தன்னை நிரூபிப்பார் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











