SJ Suryah: வரலட்சுமி சரத்குமாரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்ட SJ சூர்யா... இது என்ன புது பஞ்சாயத்து?

சென்னை: வாலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்ஜே சூர்யா, இன்று முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் எஸ்ஜே சூர்யாவுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இறைவி, மான்ஸ்டர், மாநாடு ஆகிய திரைப்படங்களில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டுப் பெற்றிருந்தது.

 SJ Suryah: Actor SJ Suryah apologizes to Varalakshmi Sarathkumar

இந்நிலையில், அவர் வரலட்சுமி சரத்குமாரிடம் திடீரென மன்னிப்புக் கேட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரலட்சுமியிடம் மன்னிப்புக் கேட்ட எஸ்ஜே சூர்யா

அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வாலி திரைப்படம் மூலம் இயக்குநரானவர் எஸ்ஜே சூர்யா. தொடர்ந்து குஷி படத்தை இயக்கிய எஸ்ஜே சூர்யா, நியூ, அ.ஆ படங்களை அவரே இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். அதன்பின்னர் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்த எஸ்ஜே சூர்யா, இன்று ஹீரோ, காமெடியன், வில்லன் என வெரைட்டியான நடிகராக மாஸ் காட்டி வருகிறார்.

அதேபோல் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் வில்லன் நடிகராக மிரட்டி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தில் எஸ்ஜே சூர்யா தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இறைவி, மான்ஸ்டர் படங்களில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. முக்கியமாக மாநாடு படத்தில் வில்லனாக நடித்து ஹீரோ சிம்புவை விடவும் ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்பட்டார்.

இந்நிலையில், எஸ்ஜே சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். சோஷியல் மீடியாவில் பிஸியாகவே இருக்கும் எஸ்ஜே சூர்யா, அடிக்கடி சக நடிகர்களுடன் ஜாலியாக சாட் செய்து வருவது வழக்கம். ஆனால், வரலட்சுமியிடம் அவர் மன்னிப்புக் கேட்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதாவது மாநாடு படம் வெளியான 2021ம் ஆண்டு நவம்பரில் வரலட்சுமி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

 SJ Suryah: Actor SJ Suryah apologizes to Varalakshmi Sarathkumar

அதில், மாநாடு திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக பாராட்டியுள்ள வரலட்சுமி சிம்புவுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். அதேபோல், எஸ்ஜே சூர்யாவின் நடிப்பை ரொம்பவே புகழ்ந்துள்ள வரலட்சுமி, அவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதனை ரொம்பவே தாமதமாக பார்த்துள்ள எஸ்ஜே சூர்யா, இதற்காகவே வரலட்சுமியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

அதில், நான் எப்படி இந்த ட்வீட்டை மிஸ் செய்தேன் என தெரியவில்லை. லேட்டாக பார்த்ததற்கு மன்னிக்கவும் வாழ்த்துக்கு மிக்க நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் எஸ்ஜே சூர்யா உண்மையாகவே டைம் லூப்பில் சிக்கிவிட்டார் போல என ஜாலியாக கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். அதேபோல், இவ்வளவு லேட்டா மன்னிப்புக் கேட்டதுக்கு கேட்காமலேயே இருந்திருக்கலாம் எனக் கூறி வருகின்றனர். அதேநேரம் இரண்டு வருடங்கள் ஆனாலும் எஸ்ஜே சூர்யாவின் இந்த நேர்மையை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X